ஆரோக்கிய சமையல்: வாழைத்தண்டு மோர்க்கூட்டு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
vazhai thandumor kuttu
vazhai thandumor kuttu

வாழைத்தண்டு மோர்க்கூட்டு

தேவையான பொருட்கள்:
வாழைத்தண்டு – ஒன்று
புளிக்காத கெட்டித் தயிர் – 100, மில்லி பச்சை மிளகாய் – ஒன்று,
தேங்காய்த் துருவல் – ஒரு சிறிய கிண்ணம்,
உப்பு – ஒரு டீஸ்பூன்.

தாளிக்க:
கடுகு, உளுத்தம்பருப்பு சீரகம் – தலா ஒரு டீஸ்பூன்,
பெருங்காயத்தூள், கறிவேப்பிலை – சிறிதளவு.

செய்முறை: வாழைத்தண்டை தோல் சீவி வில்லைகளாக நறுக்கி நாரை நீக்கிக்கொள்ளவும். பின்னர் பொடியாக நறுக்கி, உப்பு சேர்த்து வேகவிடவும். பச்சை மிளகாய், தேங்காய் இரண்டையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்துக்கொள்ளவும். அரைத்த விழுதைத் தயிருடன் கலக்கவும். பின்னர் வேகவைத்த வாழைத்தண்டுடன் அரைத்த விழுதைக் கலக்கவும். ஒரு வாணலியில் கடுகு, சீரகம், உளுத்தம்பருப்பு, பெருங்காயத்தூள், கறிவேப்பிலை தாளித்து அதில் வாழைத்தண்டுக் கலவையைச் சேர்க்கவும். பின்னர் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.

குறிப்பு: வாழைத்தண்டு சிறுநீரகக் கோளாறு வராமல் தடுக்கும். இப்படி மோர்க்கூட்டாகச் செய்யாமல் வாழைத்தண்டு ஜூஸ் எடுத்து அதனுடன் மோர், ஒரு சிட்டிகை உப்பு கலந்து குடிக்கலாம். அதேபோல தயிருடன் பச்சையாக வாழைத்தண்டை நறுக்கி போட்டும் சாப்பிடலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.