
தக்காளிக்காய் ரசவாங்கி
தேவையான பொருட்கள்:
துவரம்பருப்பு – 100 கிராம்,
தக்காளிக்காய் – 200 கிராம்,
மல்லி (தனியா) – ஒரு டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2,
கடலைப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
வெல்லம் – ஒரு சிறிய துண்டு,
உப்பு – அரை டேபிள்ஸ்பூன்.
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு – தலா அரை டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – சிறிதளவு கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: துவரம்பருப்பை குக்கரில் குழைவாக வேகவிடவும். தக்காளிக்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி, அதில் மல்லி, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து வறுக்கவும். அதனுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து, சிறிதளவு தண்ணீர்விட்டு அரைத்துக்கொள்ளவும். வேகவைத்த தக்காளியுடன் அரைத்த விழுதைச் சேர்க்கவும். இதனுடன் வெல்லம், வேகவைத்த பருப்பைச் சேர்த்து நன்கு கொதிக்கவிடவும். தாளிக்கக்கொடுத்துள்ள பொருள்களைத் தாளித்து, கொதிக்கும் கலவையில் சேர்த்து மீண்டும் ஒரு கொதிவிட்டு இறக்கவும்.
குறிப்பு: கத்திரிக்காயிலும் இதே முறையில் செய்யலாம். சிறிது புளிப்பும், வெல்லத்தின் இனிப்பும் சேர்ந்து இது தனி ருசியுடன் இருக்கும். சாதத்துடன் பிசைந்து சாப்பிடலாம். சைடிஷ்ஷாகவும் பயன்படுத்தலாம்.