
பொதுவாக பறவைகள் பறப்பதை போல கனவு வந்தால் செல்வ செழிப்பு ஏற்படும்.
பறவைகளின் முட்டைகளை கண்டால் எந்த தொழிலில் கை வைத்தாலும் அது விருத்தியடையும் என்று பொருள்.
பறவை தான் குஞ்சுக்கு உணவு ஊட்டி விடுவது போல கனவு வந்தால் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கும்.
இரண்டு புறாக்கள் ஒன்றாக பறப்பது போல் கனவு கண்டால் நண்பர்களிடம் உள்ள நட்பில் விரிசல் விழும் என்று பொருள்.

புறாவை பிடிக்க முயற்சி செய்வது போல் கனவு கண்டால் பல நண்பர்களின் நட்பை பெறுவோம் என்று பொருள்.
புறா கூட்டத்தை கனவில் கண்டால் சில உறவுகளை பிரிய நேரிடும் என்பதைக் குறிக்கிறது.
வெண்புறாவை கண்டால் உத்தியோக மாற்றம் ஏற்படும் என்று அர்த்தம்.
கருப்பு நிற புறாவை கனவில் காண்பது துக்கமான செய்தி வரும்.
புறாவை வேடன் கையில் இருபது போல கனவு வந்தால் நல்லதல்ல.