அருமையான முருங்கைக்காய் வடகம்!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Drumstick vadakam 1 - 2026

முருங்கைக்காய் வடகம்
தேவையான பொருள்கள் :
நன்கு விளைந்த அதிக பருமனில்லாத முருங்கைக்காய் – 12, தட்டைப்
பயறு (காராமணி) – ½ கிலோ,
பச்சை மிளகாய் – 15,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை :
தட்டைப் பயறை இரவு தண்ணீரில் ஊறவைக்கவும். மறுநாள் காலை தண்ணீர் அதிகம் சேர்க்காமல் கெட்டியாக நைஸாக அரைத்துக் கொள்ளவும். முருங்கைக் காய்களை நீளவாக்கில் கீறி, உள் பக்கமுள்ள சதை, விதைகளைச் சுரண்டி எடுத்து அரைத்த பருப்புடன் போட்டு, மிளகாய், உப்பு சேர்த்து அரைத்தெடுக்கவும்.

அரைத்த விழுதை கையிலெடுத்து சிறு சிறு உருண்டைகளாக வெயிலில் பாலிதீன் பேப்பரைப் போட்டு உருட்டி வைக்கவும். வெயிலில் நன்றாக வைத்து காய்ந்ததும் எடுத்து டப்பாக்களில் போட்டு வைக்கவும். பொரித்து சாம்பாரில் போட்டால் முருங்கைக்காய் மணத்துடன் சாம்பார் ருசியாக இருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.