தர்பூசணி தோலை தூர எறியாதீங்க.. இப்படி யூஸ் பண்ணுங்க!

Published:

water melon thuvaiyal - 2026

தர்பூசணி துவையல்

1கப் வெட்டிய தர்பூசணித் தோல்
*(தர்பூசணி பழத்தில் உள்ள சிவப்பு பழத்தையும், பச்சை தோலை அகற்றிவிட்டு, நடுவில் உள்ள, வெள்ளை நிற பாகத்தை மட்டும் பொடியாக வெட்டவும்)
பச்சை மிளகாய். 4
வேர்க்கடலை. 1/4கப்
சீரகம். 1/2டீஸ் ஸ்பூன்
கறிவேப்பிலை
புளி. அரை எலுமிச்சை அளவு
உப்பு
தாளிக்க
கடுகு
உளுந்து பருப்பு
வற்றல் மிளகாய்

முதலில் தர்பூசணி தோலை பொடியாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
பின்பு வாணலியை சூடு செய்து எண்ணை ஊற்றி,வேர்க்கடலை, சீரகம், வற்றல் மிளகாய், கறிவேப்பிலை, வெட்டிவைத்துள்ள தர்பூசணி எல்லாவற்றையும் நன்கு வதக்கி ஆற வைக்கவும்.

சூடு ஆறியவுடன் அத்துடன் புளி, உப்பு சேர்த்து மிக்ஸியில் கொர கொரப்பாக அரைக்கவும். பின்பு வாணலியில் கொஞ்சம் எண்ணெய், கடுகு, உளுந்து பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, துவையலில் கலந்து சுவைக்கவும்.
எல்லா சாதம், சிற்றுண்டிகளுடனும் சேர்த்து சுவையான தர்பூசணி துவையலை சுவைக்கவும்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வஸ்திரம் மரியாதை!

Related articles

Recent articles

spot_img