
கை ரேகை எனும் போது சில முக்கிய ரேகைகள் பற்றி அறியலாம்.
ஆயுள் ரேகை, இருதய ரேகை, சூரிய ரேகை, ஞான ரேகை என இதில் பலவன உள்ளது. இதில், இருதய ரேகையின் நிலையைக் கொண்டு உங்கள் காதல் மற்றும் இல்வாழ்க்கை குணாதிசயங்கள் பற்றி அறியலாம்.
இருதய ரேகை:
உள்ளங்கையில் காணப்படும் முக்கியமான ரேகைகளில் இதுவும் ஒன்றாகும். இந்த ரேகை புதன் மேட்டில் உற்பத்தியாகிச் சூரிய மேடுகளைத் தாண்டி குரு மேட்டில் முடியும். சிலருக்கு இந்த இருதய ரேகை சனி மேட்டில் முடியும்; (அ) கிரக மேடுகளுக்கு வெகுவாக கீழே தள்ளிப் புத்திரேகையை ஒட்டியும் முடியலாம். சிலர் கைகளில் புத்தி ரேகை, இருதய ரேகை ஆகிய இரண்டும் சேர்ந்து, உள்ளங்கையில் குறுக்கே ஒரே ரேகையாகவும் காணப்படலாம். இந்த இருதய ரேகை மூலம் நமது இருதயம் எவ்வாறு வேலை செய்கிறது என்பதையும், இருதயத் துடிப்பு இரத்த ஓட்டம் போன்றவற்றையும் தெரிந்துகொள்ளலாம். அத்துடன் இருதயத்தில் ஏற்படக் கூடிய கோளாறுகளையும் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த ரேகை மூலம் அன்பு, பாசம், தயை, காருண்யம், காதல் போன்ற உணர்வுகள் எந்த அளவில் உள்ளன என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
இருதய ரேகையின் மேலே ஓரத்தில் இருக்கும் ரேகைகளை வைத்து உங்களுக்கு எந்த வயதில் திருமணம் ஆகும் என்றும் கணிக்க முடியும் .
உங்கள் இரு கைகளையும் சேர்த்து வைத்து பார்த்தால் உங்கள் இருதய ரேகை சமநிலையில் இருக்கிறது எனில் நீங்கள் மிகவும் கனிவானவர், உணர்ச்சிவசப்படக் கூடியவர், உங்களது பொது அறிவு மேலோங்கி இருக்கும். திடீரென நடக்கும் விஷயங்கள் உங்களுக்கு பிடிக்காது.
அனைவரும் பார்த்து வைக்கும் பெண்ணை தான் திருமணம் செய்துக் கொள்வீர்கள். மேலும் உங்கள் வீட்டில் உங்களது மனைவியை அனைவருக்கும் பிடிக்கும் வாய்ப்புகள் அதிகம்.
வலது இருதய ரேகை மேலோங்கி இருந்தால், பெரியவர்களுக்கு உங்களை மிகவும் பிடிக்கும். வயது மூதோர் மீது உங்களுக்கு விருப்பம் அதிகமாக இருக்கும். சூழ்நிலை மற்றும் மக்களின் நிலையை பற்றி நன்கு அறிந்துக் கொள்ளும் திறன் கொண்ட நீங்கள், மற்றவர் என்ன நினைப்பார்கள் என்று கருதி செயல்பட மாட்டீர்கள். அதாவது நீங்கள் பழைய பஞ்சாங்கம் போன்று செயல்படாமல், உங்களுக்கு என்ன பிடிக்குமோ அதை தேர்வு செய்து வாழும் தன்மை உடையவர்.
இடது கை ரேகை மேலோங்கி இருந்தால், நீங்கள் கோபக்காரராக இருப்பீர்கள். சவால்களை எதிர்த்து போராடும் குணம் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு உணர்சிகரமான காதல் தான் அமையும். நீங்கள் தேர்வு செய்யும் துணை மாணவராக தான் பெரும்பாலும் இருப்பார்கள்.