வெள்ளரி லெஸ்ஸி
தேவையான பொருட்கள்:
நறுக்கின வெள்ளரிக்காய் – அரை கப்
தயிர் – அரை கப்
சர்க்கரை – 2 டேபிள் ஸ்பூன்
உப்பு – ஒரு சிட்டிகை
செய்முறை:
வெள்ளரிக்காய் தோல் நீக்கி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு ஜாரில் வெள்ளரிக்காய் துண்டுகளுடன் தயிர் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
அத்துடன், சர்க்கரை, உப்பு சேர்த்து மிக்ஸியில் ஒரு ஓட்டு ஓட்டி டம்ளரில் ஊற்றி ப்ரிட்ஜில் வைத்து ஜில்லுனு பருகவும்.