குட்டீஸ்க்கு லைக் பண்ணுவாங்க..ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Rawa Potato Finger Fry
Rawa Potato Finger Fry

ரவா உருளைக்கிழங்கு ஃபிங்கர் ஃபிரை

தேவையான பொருட்கள்
3 medium உருளைக்கிழங்கு
1 கப் ரவை மாவு
2 கப் நீர்
தேவையான அளவு கறிவேப்பிலை
1 கைநிறைய நறுக்கிய கொத்தமல்லி இலை
4 Numbers நறுக்கிய பச்சை மிளகாய்
1 medium நறுக்கிய வெங்காயம்
தேவையான அளவு உப்பு

செய்முறை
ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் ஊற்றி 2 நிமிடங்கள் கொதிக்க விடுங்கள். அதில் கொஞ்சம் எண்ணெய் மற்றும் உப்பு சேர்த்து கொள்ளுங்கள். கொதிக்கும் நீரில் ரவையை சேர்த்து கட்டியில்லாமல் நன்றாக கிளறுங்கள்.

நிமிடங்கள் மிதமானத் தீயில் வைத்து அதை வேறொரு பாத்திரத்தில் மாற்றிக்கொள்ளுங்கள்.

ஒரு பெளலில் வேக வைத்த உருளைக்கிழங்கை மசித்து அதில் நறுக்கிய பச்சை மிளகாய், கொத்துமல்லி இலைகள், வேக வைத்த ரவை மற்றும் கறிவேப்பிலை இலைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கொஞ்சம் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்.

இப்பொழுது கலவையை கொஞ்சம் எடுத்து விரல் நீளத்திற்கு சிப்ஸ் மாதிரி உருட்டுங்கள். உங்களுக்கு பிடித்த வடிவில் கூட நீங்கள் தட்டிக் கொள்ளலாம்.

வாணலியில் எண்ணெயில் வைத்து சூடானதும் விரல் வடிவத்தில் உருட்டிய உருளைக்கிழங்கு ஃபிங்கரை போட்டு பொன்னிறமாக பொரித்தெடுங்கள்.

சூடாக இனிப்பு சாஸ் அல்லது க்ரீன் சட்னியுடன் தொட்டு சாப்பிடுங்கள். மொறுமொறுப்பாக கரகரப்பாக இருக்கும் இதை மீண்டும் மீண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள். மாலை நேர சிற்றுண்டி திடீர் விருந்தினர்களை அசத்தவும் ஏற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.