
வெள்ளரி மோர் கறி
தேவையான பொருட்கள்:
வெள்ளரி – 3
தேங்காய் -அரை மூடி
தேங்காய் எண்ணெய் – தாளிக்க
சீரகம் – 1 ஸ்பூன்
தயிர் – 500 எம் எல்
கறிவேப்பிலை – 1 கைப்பிடி
மிளகாய் – சுவைக்கேற்ப
கடுகு – 1 ஸ்பூன்
மஞ்சள் – 1 ஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
செய்முறை:
நறுக்கிய வெள்ளரியுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு போட்டு காய் மூழ்கும் அளவிற்கு தண்ணீர் விட்டு முக்கால் பதத்திற்கு வேக வைக்கவும்.
தேங்காய், கசகசா, முந்திரி, மஞ்சளை ஒன்றாக சேர்த்து நைய அரைத்துக் கொள்ளவும்.
இந்த கலவையை நன்றாக அடித்த தயிருடன் கலந்துக் கொள்ளவும்.
வெள்ளரிக்காய் வெந்தவுடன் தயிர்க் கலவையை அதில் கலக்கவும். சிம்மில் வைத்து சமைக்கவும். கொதி வரக் கூடாது.
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு தாளித்து கொட்டி, நுரை கட்டியவுடன் இறக்கவும்.
எண்ணெயில் நன்கு வதக்கிய தக்காளியை தயிர்க் கலவை சேர்க்கும்போதே சேர்த்து கொதிக்க விட்டு, கெட்டியாவதற்கு அரிசி மாவையும் சேர்த்து அவியல் பதத்தில் இறக்கினால் சுவையான வெள்ளரி மோர் கறி ரெடி.
இதை குழம்பு பதத்தில் இறக்கினால் மிகச் சுவையான வெள்ளரி மோர் குழம்பு ரெடி.
வெயிலுக்கு மிகவும் சுவையான, குளிர்ச்சியான பதார்த்தம் இது.