
ஒரு பாத்திரத்தில் இரண்டு கைப்பிடி அளவு கம்பு போட்டுக் கொள்ளுங்கள். தண்ணீரை ஊற்றி 2 முறை நன்றாக கழுவி அந்த தண்ணீரை வடித்துவிட வேண்டும். நாளை காலை நீங்கள் கம்பு பால் தயார் செய்ய வேண்டும் என்றால் இன்று காலையில், கம்பில் தண்ணீரை ஊற்றி ஊற வைத்துவிட வேண்டும். இரவு வரை அந்த கம்பு தண்ணீரிலேயே ஊறட்டும்.
இரவு மீண்டும் இரண்டு முறை ஊறிய தண்ணீரை கழுவி, நீரை வடித்து விட்டு, அதே பாத்திரத்தில் ஒரு மூடியைப் போட்டு, கம்பை மூடி வைத்துவிட்டால், மறுநாள் காலை கம்பு, முளைத்து பால் எடுப்பதற்கு தயாராக இருக்கும்.
இந்த முளைத்த கம்பை வைத்து எப்படி பால் எடுப்பது. (நாள் முழுவதும் தண்ணீரில் ஊறிய கம்பை, தண்ணீரை வடிகட்டிவிட்டு பாத்திரத்தில் மூடி போட்டு இரவு முழுவதும் அப்படியே வைக்க வேண்டும்.)
1 சிறிய கப் அளவு முளைக்கட்டிய கம்பை எடுத்துக் கொண்டால், அதே சிறிய கப் அளவு தேங்காய் துருவல் எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் துருவல், முளைகட்டிய கம்பு, 1/2 ஸ்பூன் சுக்கு தூள் சேர்த்து தண்ணீரை ஊற்றி நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன் பின்பு இதை வடிகட்டி பாலை மட்டும் தனியாக எடுத்துக் கொள்ளுங்கள். இதே திப்பியை இரண்டாவது ஒருமுறை மிக்ஸியில் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து மீண்டும் பால் எடுத்துக் கொள்ளலாம். (தேங்காய்ப்பால் எடுப்போம் அல்லவா அதேபோல்தான்.)
இந்த கம்பு பாலை ரொம்பவும் திக்காக எடுக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. நாம் குடித்தால் வாயில் ஒட்டாமல் இருக்கும் பக்குவத்திற்கு பாலின் நீர்ம தன்மை இருந்தால் போதும்.
வடிகட்டிய இந்தப் கம்பு பாலில் தேவையான அளவு நாட்டுச் சர்க்கரையை சேர்த்து விடவேண்டும். காலையில் டீ காபி குடிப்பதற்கு பதிலாக இந்த கம்பு பாலைக் குடிக்கும் பழக்கத்தை கொண்டு வந்தால் ஆயுசுக்கும் நீங்கள் மருத்துவரிடம் செல்ல வேண்டாம். மருந்து மாத்திரை சாப்பிட வேண்டாம்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை இந்த பானத்தை எல்லோரும் குடிக்கலாம். கர்ப்பிணி பெண்கள் குடித்தால் உடல் ஆரோக்கியத்திற்கு மிக மிக நல்லது. குறிப்பாக வளர்ந்து வரும் உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தில் எந்த குறைபாடும் இல்லாமல் இருக்க இந்தப் கம்பு பால் அவசியம் தேவை.