
சோள தோசை
தேவையான பொருட்கள்:
வெள்ளைச் சோளம் – 200 கிராம்,
உளுந்து – 50 கிராம்,
புழுங்கலரிசி – 100 கிராம்,
வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெள்ளைச் சோளம், அரிசி, உளுந்து, வெந்தயம் நான்கையும் ஒன்றாக இரண்டு மணி நேரம் ஊறவிட்டு மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைக்கவும். இந்த மாவுடன் தேவையான உப்பு சேர்த்துக் கரைத்து எட்டு மணி நேரம் புளிக்க வைக்கவும். மாவை தோசைகளாக ஊற்றி, எண்ணெய்விட்டு சுட்டெடுக்கவும்.
குறிப்பு: சோள தோசையை மூடி வைத்து வேகவைத்தால் அதன் ருசி குறையும். அதனால் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும். அதேபோல இந்த மாவில் பணியாரமும் செய்யலாம். பணியாரத்துக்கு மாவைக் கொஞ்சம் கெட்டியாகக் கரைக்க வேண்டும்.