ஆரோக்கிய சமையல்: வரகு முறுக்கு!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
varaku muruku
varaku muruku

வரகு முறுக்கு

தேவையான பொருட்கள்:
வரகு மாவு, அரிசி மாவு,
பொட்டுக்கடலை மாவு – தலா 200 கிராம், உளுந்து – 4 டீஸ்பூன்,
எள் – 2 டீஸ்பூன்,
வெண்ணெய் – 4 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள், உப்பு – தேவைக்கேற்ப, எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

செய்முறை:
உளுந்தை வாசம் வரும் வரை வறுத்துப் பொடி செய்து சலித்து வைக்கவும். வரகு மாவு, அரிசி மாவு, பொட்டுக்கடலை மாவு அனைத்தையும் ஒரு பவுலில் போட்டு நன்கு கலந்து வைக்கவும். இதனுடன் தேவையான தண்ணீர்விட்டு வெண்ணெய், மிளகாய்த்தூள், உளுந்த மாவு, எள், தேவையான உப்பு சேர்த்து முறுக்கு மாவுப் பதத்தில் பிசையவும். மாவை முறுக்கு அச்சில் நிரப்பி, எண்ணெயைக் காயவிட்டுப் பிழிந்தெடுக்கவும்.
குறிப்பு: வரகு மாவு கடைகளில் கிடைக்கும். விருப்பப்பட்டால் வரகை மெஷினில் கொடுத்தும் அரைத்து வைத்துக்கொள்ளலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.