healthy urundai
healthy urundai

ஹெல்த்தி இனிப்பு உருண்டை

தேவையான பொருட்கள்:
வரகு, சாமை, கம்பு, குதிரைவாலி, பாசிப் பயறு (பச்சைப் பயறு) – தலா 100 கிராம், கருப்பட்டி – 400 கிராம் (பொடிக்கவும்), ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
நெய் – 4 டீஸ்பூன்.

செய்முறை:
வரகு, சாமை, கம்பு, குதிரைவாலி, பாசிப் பயறு ஆகியவற்றை வெறும் வாணலியில் ஒன்றாகப் போட்டு வாசம் வரும் வரை வறுத்து மிக்ஸியில் அரைத்துச் சலித்து எடுத்துக்கொள்ளவும்.

தண்ணீரைச் சூடாக்கி, கருப்பட்டித் தூள் சேர்த்துக் கொதிக்கவிட்டு வடிகட்டவும். வடிகட்டிய கருப்பட்டி நீரை மறுபடியும் அடுப்பில் ஏற்றிக் கொதிக்கவிட்டு, கம்பிப்பாகுப் பதம் வரும்வரை (இளம் பாகாக வந்தால் போதும்) கொதிக்கவிடவும்.

பிறகு ஏலக்காய்த்தூள் சேர்த்து பாகை இறக்கவும். அரைத்து, சலித்துவைத்துள்ள மாவில் இந்த வெல்லப்பாகைச் சேர்த்து நன்கு கலக்கவும். இதனுடன் நெய்விட்டு நன்கு கிளறி உருண்டைகளாகப் பிடிக்கவும். சத்து நிறைந்த இனிப்பு உருண்டை ரெடி.

ALSO READ:  100 கோடி மக்களுக்கு சமூகப் பாதுகாப்புக் கவசம்: பிரதமர் மோடி பெருமிதம்!

குறிப்பு: விருப்பப்பட்டால் முந்திரிப்பருப்பை நெய்யில் வறுத்துச் சேர்த்தும் உருண்டை பிடிக்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending