நாளை மின்தடை: உங்க ஏரியா வருதா இதுல..?

Published:

current cut 1
current cut 1

சென்னையில் நாளை (செவ்வாய் கிழமை) பராமரிப்புப் பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

பராமரிப்புப் பணி காரணமாக செவ்வாய் காலை 09.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

தாம்பரம் பகுதி: கோயிலம்பாக்கம் டிரன்குயில் ஏக்கர்ஸ், பௌத்தி ஏக்கர்ஸ், திருவின்நகர், பூபதி நகர், 200 அடி மேடவாக்கம் மெயின் ரோடு இரும்புலியூர் செல்லியம்மன் கோயில் தெரு, அருள் நகர், ரோஜா தோட்டம், ஏரிக்கரை, தேவநேசன் நகர் மற்றும் மேற்காணும் பகுதிகளின் அருகிலும்.

நீலாங்கரை பகுதி: புதிய மற்றும் பழைய கணேஷ் நகர், வைத்தியலிங்க சாலை, ரூபி காம்ப்ளெக்ஸ், திருவள்ளுவர் நகர், மாத கோயில், பாரதியார் நகர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

திருமுடிவாக்கம் பகுதி: சோமங்கலம், சக்தி நகர், புதுபேரு, மேட்டூர், பெரியார் காலனி, மணிமங்களம் சாலை, திருமுடிவாக்கம் தொழிற்சாலை, திருமுடிவாக்கம் கிராமம், பழந்தண்டலம், நடுவீரம்பட்டு, பூந்தண்டலம், மேலாத்துhர் மற்றும் மேற்காணும் இடங்களின் சுற்றியுள்ள பகுதிகள்.

ALSO READ:  தென்காசி வழியே ஓணம் சிறப்பு ரயில்கள் தேவை!

மதியம் 2.00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும். காலையில் முக்கிய நேரங்களில் மின்தடை ஏற்படுவதால் அதற்கு ஏற்றவாறு மக்கள் திட்டமிட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related articles

Recent articles

spot_img