Sapota fruit kesari
Sapota fruit kesari

சப்போட்டா பழ கேசரி
தேவையான பொருட்கள்
8 சப்போட்டா பழங்கள்
1/2கப் சர்க்கரை
1/2கப் ரவை
1/4கப் பால்
1/4கப் நெய்
1/2கப் பாதம்,முந்திரி,பிஸ்தா

செய்முறை
நன்கு பழுத்த சப்போட்டா பழங்களை எடுத்து தூள் உரித்து வைத்துக் கொள்ளவும்.

தோல் நீக்கிய சப்போட்டா
பழங்களை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து விழுதாக அரைக்கவும்.

ஒரு நான்ஸ்டிக் கடாயில் நெய் சேர்த்து ஸ்டவ்வில் வைத்து சூடானதும்,நறுக்கி தயாராக வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு வறுத்து எடுக்கவும்.

அதே கடாயில் ரவை சேர்த்து வதக்கவும். பின்னர் கொஞ்சம் பால் சேர்த்து கலந்துவிடவும். பின்னர் சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.

பின்னர் அரைத்து வைத்துள்ள சப்போட்டா விழுது சேர்த்து நன்கு கலந்து விடவும்.
சப்போட்டா பழ கேசரி (Sapota fruit kesari) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
மேலும் கொஞ்சம் பால் சேர்த்து கலந்து மூடி வைக்கவும்.

பின்னர் நெய் சேர்த்து கலந்து பத்து நிமிடங்கள் மிதமான சூட்டில் வைக்கவும்.பின்னர்
வறுத்து வைத்துள்ள நட்ஸ் சேர்த்து நன்கு கலந்து இறக்கினால் சப்போட்டா பழ கேசரி தயார்.

ALSO READ:  இருக்கன்குடி மாரியம்மன் கோவில் ஆடி மாத திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending