appala kuzhmbu
appala kuzhmbu

அப்பளக் குழம்பு

தேவையானவை:
புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, அப்பளம் – ஒன்று,
கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – ஒன்று,
சாம்பார் பொடி – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – 4 டீஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, அப்பளத்தை சிறியதாக கிள்ளிப்போட்டு வறுக்கவும். பின்னர் சாம்பார் பொடியை சேர்த்து லேசாக வறுத்துக்கொண்டு, புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

குழம்பு வைக்க காய் இல்லாத நேரத்தில் இந்த அப்பளக் குழம்பு பெரிதும் உதவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending