
பட்டர் நாண்
தேவையானவை:
மைதா – ஒரு கப் (சலிக்கவும்), வெண்ணெய் – ஒரு டீஸ்பூன் (உருக்கவும்), தயிர் – 2 டீஸ்பூன்,
பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்,
பேக்கிங் பவுடர் – அரை டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, வெண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, பேக்கிங் பவுடர் சேர்த்துக் கலக்கவும். இதனுடன் உருக்கிய வெண்ணெய், தயிர், பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்துக் கலந்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவைப் பிசைந்து அரை மணி நேரம் ஊறவிடவும்.
ஊறிய மாவை சிறிய உருண்டைகளாக்கி, சற்றே நீளமான சப்பாத்தி போல தேய்த்துக்கொள்ளவும். தவாவை சூடாக்கி பிறகு குறைந்த தீயில் வைத்துக் கொள்ளவும். தவாவில் படும் நாண் பகுதியை சுட்டு எடுப்பதற்கு முன் அதன்மீது சிறிது தண்ணீரை தொட்டு தடவிக்கொள்ளவும். பிறகு தண்ணீர் தடவிய பகுதியை தவாவில் படும்படி சேர்த்து 5 நிமிடம் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும். எடுத்தவுடனேயே எண்ணெய் தடவி பரிமாறவும்.
குறிப்பு: பேக்கிங் பவுடர் சேர்ப்பதால் நாண் சுட்டெடுத்ததும் சிறிது நேரத்திலேயே மொடமொடப்பாகி விடும். அதை தவிர்க்கவே நாண் மீது தண்ணீர் தடவுகிறோம்.



