
பனீர் தோசை ரோல்
தேவையானவை:
தோசை மாவு, பனீர் துருவல் – தலா ஒரு கப்,
வெங்காயம், தக்காளி – தலா 2,
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள் – ஒரு டீஸ்பூன், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி இவற்றை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து வதக்கி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு, பனீர் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
தோசைக்கல்லில் மாவை மெல்லிய தோசைகளாக வார்த்து, சிறிதளவு எண்ணெய் விட்டு சுட்டெடுத்து, அதன் மீது வதக்கிய பனீர் கலவையை பரப்பி ரோல் செய்து அடுக்கவும்.