பீட்ரூட் பச்சடி
தேவையானவை:
பீட்ரூட் – ஒன்று,
தேங்காய்த் துருவல் – கால் கப்,
சீரகம், கடுகு – தலா ஒரு டீஸ்பூன்,
கடுகு (அரைக்க) – ஒரு டீஸ்பூன்,
பச்சை மிளகாய் – 2,
தயிர் – ஒரு கப்,
கடுகு, கறிவேப்பிலை (தாளிக்க) – சிறிதளவு,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
பீட்ரூட்டை தோல் சீவி துருவவும். அதனுடன் உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகவிடவும். தேங்காய்த் துருவலுடன் பச்சை மிளகாய், சீரகம், சிறிதளவு தண்ணீர் விட்டு விழுதாக அரைக்கவும். கடுகை தனியாக அரைக்கவும். வெந்த பீட்ரூட் கலவையுடன் அரைத்த தேங்காய் விழுது, அரைத்த கடுகு சேர்த்து நன்கு கொதிக்கவிட்டு இறக்கி, கடைந்த தயிரை சேர்த்துக் கலக்கவும். சிறிதளவு எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து சேர்த்துக் கலந்து பரிமாறவும்.