November 30, 2021, 9:03 am
More

  அறிகுறியில்லை.. ஆனால் டேன்ஞர்! ஆண்களே எச்சரிக்கை!

  man
  man

  ஆண்களுக்கு ஏற்படக் கூடிய ஆபத்தான சைலண்ட் கில்லர் நோய்கள்

  சில நோய்கள் பெரும்பாலும் எந்த அறிகுறிகளையும் வெளிக்காட்டுவதில்லை. வழக்கமான மருத்துவ பரிசோதனைகளிலும் இவை தெரிவதில்லை. ஆனால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காவிட்டால், ஆபத்தாக மாறும்.

  விதைப்பை புற்றுநோய் (புரோஸ்டேட் கேன்சர்)
  புரோஸ்டேட் கேன்சர் ஆண்களிடையே மிக அதிக அளவில் ஏற்படும் நோயாகிவிட்டது. 15% ஆண்களுக்கு ஏற்படுவதாக தெரிகிறது. பொதுவாக 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்குத்தான் தோன்றுகிறது. ஆனால் சமீப காலங்களில் இது 35 வயதுடைய ஆண்களிடையேயும் தோன்றுவதாக பல பதிவுகள் தெரிவிக்கின்றன.

  எப்படி தடுப்பது: உணவில் கொழுப்பை குறைத்திடுங்கள். பால் மற்றும் சோயா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். சிவப்பு இறைச்சி, ஆல்கஹால் போன்றவற்றை குறைக்க வேண்டும். அதிக உடலுழைப்பு இல்லாதவர்கள் இடையே இந்த கேன்சர் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.

  முறையான செக்-அப்: 35 வயதுக்குப் பின்னர் புரோஸ்டேட் ஆண்டிஜென் ரத்த பரிசோதனை மற்றும் டிஜிட்டல் ரெக்டல் பரிசோதனை அவசியம்.

  நிபுணர்களின் கருத்து: சரியான வாழ்க்கை முறைகளை கடைப் பிடிப்பதன் மூலம், கேன்சர் அருகில் நெருங்காமல் பார்த்துக் கொள்ளலாம். டோஃபுவில் ஐஸோ ஃபிளேவின் என்ற சத்து இருப்பதால், புரோஸ்டேட் கேன்சர்ருக்கு ஏற்ற உணவாக கருதப்படுகிறது

  சிறுநீரக நோய்
  நீரிழிவு மற்றும் ரத்த அழுத்த நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, சிறுநீரக நோய் ஏற்படும் அபாயம் அதிகம். மேலும் இதற்கான ஆபத்து 60 வயதுக்கு மேல் மிகவும் அதிகமாகிறது. இதனால் சிறுநீரக செயல்பாடும் இழக்கப்பட்டு, ரத்தத்தில் நீரும், கழிவும் அதிகமாக சேர்ந்து விடும்.

  எப்படி தடுப்பது: ஏராளமான, பழங்கள், காய்கறிகள், தானியங்கள் மற்றும் கொட்டைகளை சாப்பிடுங்கள். அதிக கொழுப்பில்லாத இறைச்சி, மீன் போன்ற வற்றை சாப்பிடலாம். சர்க்கரை மற்றும் உப்பு உட்கொள்வதைக் குறைத்துக் கொள்ளவும், மேலும் இனிப்பூட்டப்பட்ட பானங்களையும் குறைத்துக் கொள்ளுங்கள். தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் தண்ணீரைக் குடிக்கவும், முறையாக உடற்பயிற்சி செய்யவும்.

  முறையான செக்-அப்: 35 வயதுக்குப் பின்னர் சிறுநீரக செயல்பாட்டைப் செக் செய்யும் ரத்த பரிசோதனை, அல்புமின் அளவைச் சோதிக்கும் சிறுநீர் பரிசோதனை செய்து கொள்ளவும்.

  நிபுணர்களின் கருத்து:
  சோர்வு, பசி யின்மை, குமட்டல், வாந்தி அல்லது கை விரல்கள், கால்விரளில் வீக்கம் போன்ற அறி குறிகள் இருந்தால், உடனே உடல் பரிசோதனை செய்து கொள்ளவும்.

  அதிக கொலஸ்ட்ரால்
  எந்த அறிகுறிகளையும் இது காண்பிப்பது இல்லை, அதனால் கொலஸ்ட்ரால் சோதனை செய்யும் வரும் வரை இதை கண்டறியமுடியாது.

  ரத்த நாளங்களில் அடைப்பு மற்றும் இதய நோய்கள், ஹார்ட் அட்டாக் ஏற்படுவதன் முதல் காரணம் இதுதான். மூளைக்கு செல்லும் ரத்தம் மற்றும் ஆக்ஸிஜனைத் தடுப்பதன் மூலம் இது பக்க வாதத்தையும் ஏற்படுத்தக் கூடும். பெரும்பாலும் இதனால் ஏற்படக் கூடிய சேதங்கள் மெதுவாக உருவாகி, திடீரென்று தாக்கும்.

  முறையான உடற்பயிற்சி கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். தினமும் அரைமணிநேரம் நடப்பது மற்றும் படிக்கட்டில் ஏறுவது போன்ற எளிமையான விஷயங்கள் கூட உதவக் கூடியவையே.

  நீங்கள் உணவுப் பிரியர் என்றால், தீவிரமான உடற்பயிற்சி ஒழுங்குமுறை அவசியம். முட்டை, நட்ஸ், கொழுப்பு குறைவான பால், ஃபைபர் நிறைந்த உணவை சாப்பிடுங்கள். சிவப்பு இறைச்சியையும் ஆல்கஹால் டிரிங்க்கையும் குறைத்து கொள்ளுங்கள்.

  30 வயதுக்கு மேலாக வருடாந்திர கொலஸ்ட்ரால் சோதனைகளை செய்து கொள்ளுங்கள்.

  நிபுணர்களின் கருத்து:
  “புகைப்பழக்கமும், குடிப் பழக்கமும் கொலஸ்ட்ரால் அளவை ஆபத்தான அளவுக்கு உயர்த்தி விடும். மீனை சாப்பிடுங்கள், அதில் உள்ள ஒமெகா ஃபேட்டி ஆசிட்கள் கொலஸ்ட் ராலின் அளவைக் குறைக்க உதவும்.

  கல்லீரல் நோய்
  கல்லீரல் நோய் என்பது, கல்லீரலின் செல் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளைப் பாதிக்கக் கூடிய ஒரு நிலைமையாகும். இது வைரஸ் அல்லது பாக்டீரியா நோய் தொற்றுகளால் ஏற்படலாம். ஆல்கஹாலிசம் மற்றும் நீண்ட காலம் மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படுகிறது. இதனால் மஞ்சள் காமாலை ஏற்படலாம், குமட்டல், வயிற்றைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீக்கம் போன்றவையும் இதன் அறிகுறிகளாகும். நீண்ட நாட்களாக நிறைவுற்ற கொழுப்பை (வெண்ணெய், நெய் மற்றும் பதப்படுத்திய இறைச்சிகள்) சாப்பிடுவ தாலும் கல்லீரல் நோய்கள் ஏற்படலாம்.

  நிறைய பழங்கள் மற்றும் காய் கறிகளை சாப்பிடவும். உடற் பயிற்சி மிகவும் அவசியமானது. ஆல்கஹால் பயன்பாட்டையும் குறைத்துக் கொள்ளுங்கள்.

  30 வயதுக்கு மேல் புரொட்டீன், அல்புமின் அளவை சரிபார்க்க சிறுநீரக செயல்பாட்டு சோதனைகள் செய்து கொள்ள வேண்டும்.

  நிபுணர்களின் கருத்து:
  சாதாரண பாராசிட்டமாலைக் கூட நீண்டகாலம் பயன்படுத்தினால் அது உடலுக்கு ஆபத்தாகலாம். ஆல்கஹாலையும் பிரிஸ்கிரிப்ஷன் மருந்துகளையும் ஒன்றாக கலக்காதீர்கள்.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,105FansLike
  369FollowersFollow
  46FollowersFollow
  74FollowersFollow
  1,756FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-