ஆரோக்கிய சமையல்: கம்பு அடை!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
kampu adai
kampu adai

கம்பு அடை
தேவையானவை:
கம்பு – 2 கப்,
வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்), கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,
பச்சை மிளகாய் – 4,
கடுகு – அரை டீஸ்பூன்,
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:
வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கவும். கம்பை ஒரு மணி நேரம் ஊறவைத்து நன்கு கழுவி, சிறிதளவு உப்பு சேர்த்து, நீர் விடாமல் கிரைண்டரில் அரைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, மாவில் சேர்த்துப் பிசைந்து, தோசைக்கல்லில் அடைகளாகத் தட்டி, எண்ணெய் விட்டு சுட்டெடுக்கவும்.
கம்பை உலரவிட்டு, மெஷினில் கொடுத்து மாவாக்கி பயன்படுத்தியும் இதைச் செய்யலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.