December 6, 2025, 9:14 AM
26.8 C
Chennai

நம்ம ஊரு சுற்றுலா: பஞ்சவடி பிரமாண்ட ஆஞ்சநேயர்!

panchavati - 2025
#image_title

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

பகுதி 7 – பஞ்சவடி

மயிலம் முருகன் கோயிலுக்குப் பக்கத்திலேயே திருவக்கரை வக்ரகாளியம்மன், பஞ்சவடி ஆஞ்சநேயர் ஆகிய கோயில்கள் இருப்பதால் இவற்றையும் நாம் தரிசிக்கலாம். அன்று சனிக்கிழமை எனவே பஞ்சவடி, பஞ்சமுக ஆஞ்சநேயரை நாம் தரிசிக்க முடியும் என்பதால் நாங்கள் எங்கள் காரை பஞ்சவடி நோக்கி செலுத்தினோம். சுமார் 1245 மணிக்கு நாங்கள் பஞ்சவடி வந்து சேர்ந்தோம். மயிலத்திலிருந்து பஞ்சவடி செல்ல இரண்டு பாதைகள் உள்ளன. முதல் பாதை மாநில நெடுஞ்சாலை 132 வழி. இரண்டாவது சிறிது தூரம் மாநில நெடுஞ்சாலையில் சென்று விட்டு, மீண்டும் தேசிய நெடுஞ்சாலை 32 வழியாகச் செல்வது. இரண்டாவது வழிதான் அருமையான வழி. புதுச்சேரிக்குள் நுழைய லைசன்ஸ் போட வேண்டும். லைசன்ஸ் போட்ட பின்னர் பஞ்சவடி கோயிலுக்குச் செல்லலாம்.

          பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயில் இருக்கும் இடம் விழுப்புரம் மாவட்டம், பஞ்சவடி என்னும் சிற்றூர். இங்கே ஆஞ்சநேயரின் பெயர் ஜெயமங்கள பஞ்சமுக ஆஞ்சநேயர் ஆகும்.        ஒரு காலத்தில் இந்த பஞ்சவடியில் சித்தர்களும், முனிவர்களும் தவம் செய்து வந்தனர். பல ரிஷிகள் வேத சாஸ்திரங்களை பலருக்கும் உபதேசம் செய்தனர். இதுபற்றிய விபரம் ரமணி அண்ணா என்பவர் பார்த்த தேவபிரசன்னத்தில் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் இந்த புண்ணிய இடத்தில் ஆஞ்சநேயர் கோவில் கட்ட முடிவானது. ஆஞ்சநேயர் மாபெரும் சக்தி படைத்தவர் என்பதால், மிகப்பிரமாண்டமான சிலை அமைக்கப்பட்டது. செங்கல்பட்டு அருகிலுள்ள சிறுதாமூரில் கிடைத்த 150 டன் எடை கருங்கல்லைக் கொண்டு பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலை உருவாக்கப்பட்டது.

          ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகம் ஏன் என்பதற்கும் காரணம் உண்டு. இராமனுக்கும், இராவணனுக்கும் போர் நடந்த போது, இராவணன் ஆயுதங்களை இழந்தான். இதனால் இராமர் அவனை

‘ஆள் ஐயா! உனக்கு அமைந்தன மாருதம் அறைந்த

பூளை ஆயின கண்டனை; இன்று போய், போர்க்கு

நாளை வா’ என நல்கினன்–நாகு இளங் கமுகின்

வாளை தாவுறு கோசல நாடுடை வள்ளல்.

(கம்பராமாயணம், யுத்த காண்டம்)

          என்று அவனை நாளை ஆயுதங்களுடன், படைகளுடன் போருக்கு வருமாரு சொன்னார். இராமர் இவ்வாறு செய்தது தன்னை திருத்துவதற்கு என்பதை இராவணன் உணரவில்லை. மீண்டும் இராமருடன் போர் செய்ய நினைத்த இராவணன், “மயில்ராவணன்’ என்ற மற்றொரு அசுரனின் துணையுடன் போருக்கு வந்தான். இராமரை அழிக்க மயில்ராவணன் கொடிய யாகம் நடத்த திட்டமிட்டான். இந்த யாகம் நடந்தால் இராம இலட்சுமணரின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று விபீஷணன் இராமரிடம் தெரிவித்தான். மயில்ராவணனை அழிக்க ஆஞ்சநேயரை அனுப்பினார் இராமன். நரசிம்மர், ஹயக்கிரீவர், வராகர், கருடன், ஆகியோரை வணங்கி ஆசி பெற்ற ஆஞ்சநேயருக்கு, அந்த தெய்வங்கள் தங்களின் சக்தியை அளித்தனர். இதன்மூலம் ஆஞ்சநேயர் பஞ்சமுகம் கொண்டு விஸ்வரூபம் எடுத்து மயில் ராவணனை அழித்தார். இதனால்தான் ஆஞ்சநேயருக்கு பஞ்சமுகங்கள்.

          பன்னிரண்டு ஏக்கர் நிலப்பரப்பில் தெற்கு பார்த்து கோவில் அமைந்துள்ளது. இராமர், சீதை, இலட்சுமணன், சத்துருக்கனன், பரதன் ஆகியோர் ஒரு சன்னதியில் அருள்பாலிக்கின்றனர். மூலவர் 36 அடி உயர ஆஞ்சநேயருக்கு மேல் 118 அடி உயர விமானமும், அதன் மீது 5 அடி உயர கலசமும் அமைக்கப்பட்டுள்ளது. மூலவருக்கு அபிஷேகம் செய்ய லிஃப்ட் இருக்கிறது. இந்த மூலவருக்கு பாலாபிஷேகம் செய்ய 1008 லிட்டர் பால் தேவைப்படும். இங்குள்ள 1200 கிலோ எடையுள்ள மணியை ஒலித்தால் 8 கி.மீ. தூரம் ஒலிக் கேட்கும். திருக்கோயிலுக்கு ஒரு பெரிய தீர்த்த கிணறும் உள்ளது. இங்கு ராமரின் பாதுகைகள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டுள்ளன. இது சந்தன மரத்தால் செய்யப்பட்டவை. இதற்கு 1.25 கிலோ எடையுள்ள தங்க கவசம் அணிவிக்கப்பட்டுள்ளது. இங்கே ஒரு மிதக்கும் கல்லும் பக்தர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories