ஹை ஜாலி.. கோதுமை பிரெட் சியாலி!

சமையல் புதிது லைஃப் ஸ்டைல்
Wheat Fred Siali
Wheat Fred Siali

கோதுமை பிரெட் சியாலி

தேவையானவை:
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், நீளமாக நறுக்கிய வெங்காயம் – கால் கப், பொடியாக நறுக்கிய தக்காளி – ஒன்று, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் – 2 டீஸ்பூன்,
கோதுமை பிரெட் – 4 (ஓரங்களை எடுத்துவிட்டு நீள நீளமாக வெட்டிக்கொள்ளவும்),
ஃப்ரெஷ் பச்சைப் பட்டாணி – 2 டேபிள்ஸ்பூன்,
சாம்பார் பொடி – ஒரு டீஸ்பூன், தனியாத்தூள் (மல்லித்தூள்) – அரை டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – சிறிதளவு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு, வேர்க்கடலைப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்.

தாளிக்க:
கடுகு – அரை டீஸ்பூன்,
உளுந்து – ஒரு டீஸ்பூன்,
கறிவேப்பிலை – சிறிதளவு,
எண்ணெய் – தேவையான அளவு.

செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைச் சேர்த்து தாளித்து, இஞ்சி – பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். இத்துடன் பச்சைப் பட்டாணியை சேர்த்து வதக்கி அது வெந்ததும் பிரெட் துண்டுகளைப் போட்டு வறுத்து சாம்பார் பொடி, மஞ்சள்தூள், உப்பு, தனியாத்தூள் சேர்த்து மசாலா வாசனை போகும் வரை வதக்கவும். வேர்க்கடலைப்பொடி தூவி இறக்கி பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.