வாழைப்பூ குழம்பு
தேவையானவை:
வாழைப்பூ – 1 (ஆய்ந்து, நடுவில் உள்ள நரம்பை நீக்கவும்),
ஒன்றிரண்டாக தட்டிய சின்ன வெங்காயம், தேங்காய்ப்பால் – தலா ஒரு கப்,
சீரகம் – 2 டீஸ்பூன்,
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
ஆய்ந்த வாழைப்பூவை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து விட்டு, வெங்காயம், சீரகத்தைப் போட்டு… உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், எண்ணெய் சேர்த்து அடுப்பில் வைத்து கொதிக்கவிடவும். நன்றாகக் கொதித்ததும் வெந்த வாழைப்பூ, தேங்காய்பால் சேர்த்து, எண்ணெய் பிரிந்து வந்ததும் இறக்கவும்
ஆரோக்கிய சமையல்: வாழைப்பூ குழம்பு!
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari