
சட்னி சாதம்
தேவையான பொருட்கள்
சாதம் -ஒரு கப்
தக்காளி-2
சின்ன வெங்காயம்-8
முழு பூண்டு-2
உப்பு-தேவைக்கு
வரவிளகாய்-3
எண்ணெய்- 2 ஸ்பூன்
செய்முறை
சாதத்தை உதிரியாக இருக்கு பதத்துக்கு வடித்து தயாராக வைக்கவும்.
பூடு இரண்டாக நறுக்கவும். வெங்காயத்தை பெரிய துண்டுகளாக நறுக்கவும். தக்காளியை நான்காக நறுக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் வரமிளகாய், பூடு,சின்ன வெங்காயம் சேர்த்து வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்கவும்
பின்னர் தக்காளி சேர்த்து ஒன்றுசேரும்வரை வதக்கவும்
சிறிது நேரம் ஆற வைத்து சூடு தணிந்ததும் மிக்ஸியில் அரைக்கவும். அதன் பின்னர் தேவைக்கு உப்பு சேர்க்கவும். இந்த விழுதை சாதத்தில் சேர்த்து சாப்பிடவும்.
விருப்பப்பட்டால் மீண்டும் எண்ணெயில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை தாளித்து சட்னி சேர்த்து அதன் பின்னர் சாதத்தை கொட்டி 2 நிமிடங்கள் கிளறி விட்டு பின் இறக்கலாம்.
நேரமிருக்கும் போது அரைத்து பிரிட்ஜில் வைத்துவிட்டு தேவைப்படும் போது சாதத்தில் சேர்த்து சாப்பிடலாம். உடனடி சாதம் தயார்.
வெறும் விழுதே இட்லி, தோசை, இடியாப்பம்க்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
டிபன்பாக்ஸில் கொடுத்துவிட ஏற்றது.
அரைத்த பின்னர் உப்பு சேர்ப்பதால் அளவு கூடிவிடும் கவலை இல்லை.