
முளைபயிறு பிரைட் ரைஸ்
தேவையான பொருட்கள்
பாசுமதி அரிசி – கால் கிலோ,
நறுக்கிய வெங்காயத்தாள் – ஒரு கப்,
முளைக்கட்டிய பயறு – அரை கப்,
குடமிளகாய், முட்டைகோஸ் – கால் கப்,
வெள்ளை மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்,
சர்க்கரை – ஒரு டேபிள்ஸ்பூன்,
சோயா சாஸ் – 3 டீஸ்பூன்,
அஜினமோட்டோ – அரை டீஸ்பூன் (விருப்பப்பட்டால்),
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
அரைத்துக்கொள்ள:
பச்சை மிளகாய் – 2,
இஞ்சி – அரை துண்டு.
செய்முறை
அரிசியைக் கழுவி வேக வைத்து சாதமாக வடித்துக் கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் அரைத்த பச்சை மிளகாய் – இஞ்சி விழுதைப் போட்டு வதக்கவும்.
சர்க்கரை, குடமிளகாய், முட்டைகோஸ், முளைப்பயறு, வெள்ளை மிளகுத்தூள் சேர்த்து வதக்கி, அஜினோமோட்டோ சேர்க்கவும்.
கடைசியில் வெங்காயத்தாள், உப்பு, சாதம், சோயா சாஸ் சேர்த்து, அடுப்பை பெரிய தீயில் வைத்துக் கிளறி இறக்கவும்.