பால் பொங்கல்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – அரை படி
பால் – 2 லிட்டர்
உப்பு – ஒரு மேசைக்கரண்டி+ஒரு தேக்கரண்டி
செய்முறை
பச்சரிசியை சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும். மற்ற தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும்.
அரிசியை களைந்து விட்டு அரை மணி நேரம் வைத்திருக்கவும்.
வெங்கல பானையில் பாலை ஊற்றி அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும்.
பால் கொதி வந்ததும் தீயை மிதமாக வைத்து களைந்து வைத்திருக்கும் அரிசியை போட்டு கிளறி விடவும்.
அரிசியை சேர்த்த பின்னர் 20 நிமிடங்கள் வேக விடவும். அரிசி வெந்ததும் உப்பு போட்டு கிளறி விட்டு ஒரு நிமிடம் கழித்து இறக்கி வைக்கவும். அரிசி வேகும் வரை இடையிடையே கிளறி விடவும்.
சுவையான பால் பொங்கல் தயார். பொங்கல் கறியுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.