அரி நெல்லிக்காய் சாதம்
தேவையான பொருட்கள்
அரிசி – 2 ஆழாக்கு,
சின்ன நெல்லிக்காய் – 25,
சின்ன வெங்காயம் – 10,
காய்ந்த மிளகாய் – 5,
கறிவேப்பிலை – ஒரு கொத்து,
கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி,
உளுத்தம் பருப்பு – 2 தேக்கரண்டி,
கடுகு – 1/2 தேக்கரண்டி,
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி,
எண்ணெய் – 2 மேசைக்கரண்டி,
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி,
உப்பு – தேவையான அளவு.
செய்முறை
அரிசியை கழுவி, குழையாமல் சாதம் வைத்து, நல்லெண்ணெய் கலந்து ஆற வைக்கவும்.
நெல்லிக்காயை கழுவி தட்டி கொட்டையை தனியே எடுத்து விட்டு, நெல்லிக்காயை நசுக்கி வைக்கவும்.
வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும்.
மிளகாயை கிள்ளி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன், க்டுகு, கடலைபருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, காய்ந்த மிளகாய் சேர்க்கவும்.
மிளகாய் சிவந்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கியதும், நெல்லிக்காய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
நெல்லிக்காய் வதங்கி, அதில் இருக்கும் தண்ணியிலேயே வேகும்.
நன்றாக வெந்ததும் இறக்கி, ஆற வைத்த சாதம் கலந்து, கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
எலுமிச்சை சாதம் போல் புளிப்புடன் நன்றாக இருக்கும். அப்பளம், வடகம், துவையல் தொட்டுக்க நன்றாக இருக்கும்.