வாந்தி, வயிற்றுப் பொருமல் சரியாக…
இஞ்சி, புதினா, கொத்துமல்லிக் கீரை சேர்த்து துவையலரைத்து சாப்பிட அஜீரணம் குணமாகும். பேதியையும் நிறுத்தும்.
சிறுநீர் சம்பந்தமான பிணிக்கு…
வெள்ளை நாவற்பழம் சாப்பிட நீரிழிவைப் போக்கும். நீரைப் பிரிக்கும். நீர்ச் சுருக்கு மாறும். தாது புஷ்டியை ஏற்படுத்தும்.
வெட்டு, குத்து, குண்டு பட்ட காயத்துக்கு…
கழற்சிக் கொழுந்தை நல்லெண்ணெய் விட்டு அரைத்து வெதுப்பிக் கட்ட வலி, நோய் நீங்கும்.
அழகான கண்களுக்கு…
ஆப்பிளை சுத்தமான தேனில் நனைத்து சாப்பிட சில வாரங்களில் கண்கள் அழகு பெறுவதோடு சிறந்த ஒளியையும் பெறும்.
ஊது காமாலைக்கு…
கோவை இலைச்சாறு இரண்டு அவுன்ஸ் காலை, மாலை வெறும் வயிற்றில் சாப்பிட ஊது காமாலை குணமாகும்.