மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த அறிவிப்பில் Fitter பணிகளுக்கு என மொத்தம் நான்கு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அனுமதியுடன் செயல்படக்கூடிய பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது என குறிப்பிடப்பட்டுள்ளது.
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் உதவித்தொகையாக ரூ.6,000 முதல் ரூ. 7,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பில் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருப்பம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
மேலும் இந்த பணி தொடர்பாக முழு விவரங்களுக்கு கீழே உள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.
For More Info: Apprenticeship Opportunity View | Apprenticeship Training Portal (apprenticeshipindia.gov.in)