bottle gourd rice - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: சுரைக்காய் சாதம்!

லைஃப் ஸ்டைல் சமையல் புதிது
bottle gourd rice - 2026

சுரைக்காய் சாதம்
தேவையான பொருட்கள் :

சுரைக்காய் – 1/2 கப் {பொடியாக நறுக்கியது}
வடித்த சாதம் – 1 கப்
காய்ந்த மிளகாய் – 1
பூண்டு – 4 பற்கள்
சீரகம் – 1 தேக்கரண்டி
தக்காளி – 1
உப்பு – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய் – 1 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
உடைத்த உளுந்து – 1 தேக்கரண்டி
கடலை பருப்பு – 1 தேக்கரண்டி
பெருங்காயம் – 1 சிட்டிகை
கறிவேப்பிலை – சிறிதளவு

செய்முறை :

சுரைக்காயை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சீரகம் போட்டு பொறிய விடவும்.
பின் காய்ந்த மிளகாய், சுரைக்காய், தக்காளி, உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
ஆறிய பின் மிக்ஸி ஜாரில் கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
ஒரு வாணலில் எண்ணெய் விட்டு சூடு செய்து தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களால் தாளிக்கவும்.
பின் அரைத்த விழுதை அதனுடன் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும்.
பின் அடுப்பை அணைக்கவும்.
பின் வடித்த சாதத்துடன் இக்கலவையை கலக்கவும்.
சூடாக சுரைக்காய் சாதத்தை மாம்பழத்துடன் பரிமாறவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.