health tips - 2026

அ முதல் னௌ வரை அப்பாச்சி தீர்வு: இளநரை, ஆஸ்துமா, கக்குவான், கண்கட்டி..!

லைஃப் ஸ்டைல் நலவாழ்வு
health tips - 2026

இளநரைக்கு…

ஒரு தாமரைப் பூவை இரண்டு டம்ளர் நீர் விட்டு காய்ச்சி பாதியாக சுண்டியதும் இறக்கி வடிகட்டி காலையில் ஒரு பங்கும் மாலையில் ஒரு பங்குமாக இரண்டு வாரம் சாப்பிட்டு வர இளநரை மறையும்.

ஆஸ்துமா குறைய…

ஒரு கரண்டி சர்க்கரை பாகில் பத்து சொட்டு நீலகிரி தைவம் விட்டு நன்கு கலக்கி உள்ளுக்கு சாப்பிட்டு வர ஆஸ்துமா தொந்தரவு குறையும்.

காரட்டின் மகிமை

கேரட் ஜூஸ் குடித்தாவ் சருமத் தொந்தரவு வராது. சருமம் மிருதுவாகும். தோலுக்கு ஊட்டம் தரும். மாலைக் கண் நோயைக் குணமாக்கும்.

கக்குவான் இருமலுக்கு…

தூதுவளைச் சாற்றில் கோஷ்டம் கலந்து குழப்பி பசுநெய் கலந்து உள்ளுக்குக் கொடுக்க குணமாகும். இது தவிர பலாச்சுளையை தேனில் நனைத்து சாப்பிட குணமாகும்.

கண் கட்டியா?

தாய்ப்பாலையும் விளக்கெண்ணெயையும் கலந்து கண்களில் இரண்டு சொட்டுக்கள் விட்டால் கண்கட்டி, கண் எரிச்சல், கண் சிவத்தல். கண்ணில் நீர் வடிதல் போன்ற எல்லாத் தொந்தரவுகளும் நீங்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + eleven =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.