Pomegranate fruit - 2026

லஞ்ச் பாக்ஸ் கார்னர்: புளிப்பு மாதுளை சாதம்!

லைஃப் ஸ்டைல் சமையல் புதிது
Pomegranate fruit - 2026

புளிப்பு மாதுளை சாதம்
தேவையான பொருட்கள்
பச்சரிசி – 1 கப்
புளிப்பு மாதுளம் பழம் – 1
கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கடுகு – கால் தேக்கரண்டி
பச்சை மிளகாய் – 4
மஞ்சள் பொடி – கால் தேக்கரண்டி
எண்ணெய் – 4 மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – 1 கொத்து
கொத்தமல்லி தழை – கைப்பிடி அளவு
உப்பு தேவைக்கேற்ப


செய்முறை
அரை மாதுளம் பழத்தை சாறு பிழிந்து வடிகட்டி அதில் உப்பு, மஞ்சள் பொடி கரைத்து வைக்கவும்.
பச்சரிசியை உதிரிப் பதத்தில் வடித்து ஆற விடவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, கடலைபருப்பு, உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக போட்டு தாளித்து மாதுளம் பழ கரைசலில் கொட்டி சாதத்தில் நன்கு கலக்கவும்.
மீதி மாதுளை, கொத்தமல்லி தழை சேர்த்து இறக்கவும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.