வாட்ஸ்அப்பில் புதிய அப்டேட்..!

whatsapp - 2026

வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்தும் வகையில் பல அம்சங்களை உருவாக்கி வருகிறது.

புதிய தேடல் ஆப்ஷன்கள் மற்றும் மெஸேஜ் ரியாக்ஷன்ஸ் போன்ற அம்சங்களுக்கு பிறகு, வாட்ஸ்அப் இப்போது மெசேஜிங் பயன்பாட்டில் அழைப்புகளில் இணைய லிங்குகளை வாடிக்கையாளர்கள் உருவாக்குவதற்கான வசதிகளை வழங்க இருக்கிறது.

வாட்ஸ்அப் ஏற்கனவே ஒரு குழு அழைப்பில் இருந்தாலும் இடையில் அந்த அழைப்பில் ஒருவர் இணைந்துக்கொள்ளும் அம்சத்தை அறிமுகப்படுத்தியது.

இப்போது வாட்ஸ்அப் லிங்குகளை உருவாக்கி அதன்மூலம் மற்ற கான்டெக்ட்டுகளை அழைப்பில் இணைப்பதற்கான அம்சங்களையும் அனுமதிக்க உள்ளது.

இது குறித்து வாட்ஸ்அப் கூறுகையில், அழைப்புக்கான லிங்குகளை பயன்படுத்தி மற்றவர்கள் அழைப்புகளில் சேருவதை வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் வழங்கும்.

கான்டெக்ட் லிஸ்டில் இருக்கும் நபர்கள் யாருக்கு வேண்டுமானாலும் இந்த லிங்கை அனுப்பலாம், மேலும் வாட்ஸ்அப் அக்கவுண்ட் இல்லாதவர்களுக்கும் இந்த லிங்கை அனுப்பமுடியும்.

இந்த லிங்கை பயன்படுத்தி அவர்கள் வாட்ஸ்அப்பில் அக்கவுண்ட்டை ஓபன் செய்யலாம். வாட்ஸ்அப் அழைப்புகள் என்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன் மூலம் பாதுகாக்கப்படுகின்றன.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

இதேபோன்ற அம்சம் சற்று மாறுதலாக மெஸ்ஸெஞ்சரில் உள்ளது, மெஸ்ஸெஞ்சரில் யார் வேண்டுமானாலும் இணைத்துக்கொள்ளலாம், இவ்வளவு ஏன் பேஸ்புக் இல்லாதவர்களும் இணைந்து கொள்ளலாம். ஆனால் வாட்ஸ்அப்பில் ஒரு குறை என்னவென்றால் வாட்ஸ் அப் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் மட்டுமே அந்த அழைப்பில் இணைந்துகொள்ள முடியும்.

மேலும் இந்த அம்சமானது தற்போது சோதனையில் இருப்பதால் உங்களால் லிங்கை உருவாக்க முடியாது, ஆனால் விரைவில் இந்த அம்சத்தை உங்களால் பயன்படுத்த முடியும் என்று வாட்ஸ்அப் கூறுகிறது.

இந்த அம்சத்தை நினைத்து உடனடியாக யாரும் மகிழ்ச்சியடைய முடியாது, ஏனெனில் வாட்ஸ்அப் சில அம்சங்களை சோதனை செய்த பிறகு அதனை முழுமையாக வழங்காமல் நீக்கிவிடுகிறது. அதனால் இந்த அம்சத்தை முழுமையான பயன்பாட்டிற்கு செயல்படுத்தும் அல்லது நீக்கிவிடும் என்பது பற்றி பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் வாட்ஸ்அப் கூடிய விரைவில் மெசேஜ்களை எமோஜிகள் மூலம் பதிலளிக்கும் விருப்பத்தை வழங்க இருக்கிறது, ஒரு மெசேஜிற்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள ஆறு எமோஜிகளில் ஏதேனும் ஒன்றை தேர்ந்தெடுத்து பதிலாக அளிக்கலாம்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 27 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

கல்வி அமைச்சரின் ராஜினாமா – மத்திய அரசின் தோல்வியா, விவேகமா?

தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தது மத்திய அரசின் தோல்வியா என்ற கேள்வி பலர் மனதில் எழும். இல்லை, அது மத்திய அரசின் விவேகம் என்பதுதான் சரியான பதிலாக இருக்கும்.

ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம்.  நம்முடைய வாழ்க்கையிலே சில தேதிகள் எப்படிப்பட்டவை என்றால், அவற்றை நினைவில் வைத்துக் கொள்ள நாம் நாட்காட்டியைப் பார்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இருப்பதில்லை. 

பஞ்சாங்கம் ஜூலை 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் ஜூலை 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

கரப்பான்பூச்சியும் கல்வி அமைச்சரும்!

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயர் கொண்ட ஒரு புதிய அமைப்பு இருக்கிறது. தலைநகர் டெல்லியில் அது தற்போது என்ன செய்கிறது, அதற்கு எதிர்க் கட்சிகள் ஏன் ஆதரவு தருகின்றன?

பஞ்சாங்கம் ஜூலை 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தாம்பரம் – தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

தாம்பரம் தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில் சேவை திருச்சி மதுரை சிவகாசி ராஜபாளையம் வழியாக அதி விரைவு ரயில் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.

Entertainment News

Popular Categories