வெஜிடபிள் ஆம்லெட்
தேவையான பொருட்கள்:
கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு – தலா 2 (அ) 3 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்)
சோம்புத்தூள், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன்
பால் – 2 டேபிள்ஸ்பூன்
நெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
நெய் நீங்கலாக அனைத்துப் பொருள்களையும் சேர்த்து தோசை மாவைவிட நீர்க்கக் கரைக்கவும் (தேவைப்பட்டால் சிறிதளவு தண்ணீர் சேர்க்கலாம்). தோசைக்கல்லில் நெய்விட்டு, கரைத்து வைத்ததை ஊற்றி வேகவிட்டு, திருப்பிப் போட்டு எடுக்கவும்.