
எனர்ஜி லட்டு
தேவையானபொருட்கள்
1/ 4 கப் கம்பு மாவு
1/4கப் கேழ்வரகு மாவு
1/4கப் சிகப்பு சிறுசோள மாவு •
1/4கப் கருப்பு கவுனி அரிசி மாவு
1/4 கப் துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை
பசு நெய்
1/4கப் நாட்டு சர்க்கரை
செய்முறை
எளிதாகவும், மலிவாகவும் கிடைக்கும் கம்பு, கேழ்வரகு மாவுகளை மட்டும் வைத்து இந்த லட்டினை தயாரிக்கலாம்.
சிகப்பு சோளம், கவுனி அரிசியை மாவாக நன்கு அரைத்துக்கொள்ளவும்,
• பின் அனைத்து மாவையும் வெறும் வாணலியில் சிறு தீயில் வைத்து வாசனை வரும் வரை வறுத்துக் கொள்ளவேண்டும்.
அதன் பின் துருவிய முந்திரி, பாதாம், நிலக்கடலை கலவையை லேசாக வாசனை வரும் வரை பசு நெய்யில் வறுக்கவும்.
இந்த கலவைகள் சூடாக இருக்கும் பொழுதே பொடித்த நாட்டு சர்க்கரையை கலந்து நெய்யை உருக்ஙி ஊற்றி கைபொறுக்கும் சூட்டில் சுடச் சுட சிறு உருண்டைகளாகப் பிடித்துக் எடுக்க வேண்டும்.
சத்தான எனர்ஜி லட்டு தயார்.
ஒருமுறை தயாரித்த இந்த லட்டினை ஒருவாரம் வரை வைத்துக்கொள்ளலாம்.