
டாக்டர்.எஸ்.பத்மப்ரியா,
எழுத்தாளர், சிந்தனையாளர் (சென்னை)
திரு தாணுலிங் நாடார் கன்னியாகுமரி மாவட்டத்தில் 1915 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம 17 ஆம் தேதி, பொற்றையடி கிராமத்தில் பிறந்தார். சிறுவயதிலிருந்தே இந்து மதத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். இந்து மதத்தை மிகுந்த பக்தியுடன் கடைப்பிடித்தார். சில காலம் காவல் துறையில் பணிபுரிந்த அவர், ராணுவத்தில் சேர்ந்தார்.
சட்டப் பட்டம் பெற்று, மாவட்ட நீதிமன்றத்தில் சில காலம் வழக்கறிஞராகப் பணியாற்றினார். அவர் ராணுவம், வக்கீல் மற்றும் ஆசிரியராக பணி புரிந்தார்.
1946 ஆம் ஆண்டில் அவர் திருத்தமிழர் இயக்கத்தில் உறுப்பினரானார். 1947 ஆம் ஆண்டில் அவர் திருத்தமிழர் இயக்க ஐவர் போராட்டகுழுவில் ஒருவரானார்.
மண்டைக்காடு கலவரத்தை ஒட்டி, எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது, ஒரு சம்பவம் நடந்தது. கண்ணியாகுமரி மாவட்டத்தில் இந்துக்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் இடையே கலவரம் ஏற்பட்டது. திரு.எம்.ஜி.ஆர். இந்துக்களை காக்க குறிப்பிடத்தக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்போது, திரு. தாணுலிங்க நாடார், எம்.ஜி.ஆரிடம் நேரடியாகவும் தெளிவாகவும் பேசினார். இந்துக்களை பார்த்துக் கொள்வார் என்று.
1951 ஆணடு தமிழ்நாடு திருவிதாங்கூர் காங்கிரஸ் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951 கன்னியாகுமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைந்தது.
அவர 1957 ஆம் ஆண்டு நாகர் கோவில் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். அவர் 1964 நாடாளுமன்ற ராஜ்யசபை உறுப்பினராக இருந்தார்.திரு தாணுலிங்க நாடார் தமிழ் மற்றும இந்துகளின் தன்மானம் காத்தார்.
1971 ல் திரு. தாணுலிங்க நாடார் காங்கிரஸில் இருந்த கிறிஸ்தவ மதவெறியை கண்டித்து காங்கிரசை விட்டு வெளியேறினார். தாணுலிங்க நாடார் இந்து முன்னணியின் முதல் தமிழகத் தலைவராக இருந்தவர்.
அவர் 1982 இந்து முன்னணித் தலைவராக பொறுப்பேற்றார். அவர 1987 அம் ஆண்டு, நாகபுரியில் ஆர்.எஸ்.எஸ் விஜயதசமி விழாவில் தலைமை தாங்கினார். தாணுலிங்க நாடார் அவர்கள் இராம. கோபலன் அவர்களோடு இணைந்தது இந்து முன்னணி மாநிலத் தலைவர் பணியை தொடரந்தார்.
அவர 1988 ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் நகரில் டாக்டர் ஹெட்கேவார் நூற்றாண்டு விழா கூட்டத்தில் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது காலமானார். இவ்வாறு, பெரியவரின் வாழ்க்கை வரலாறு இருந்தது. நவம்பர் 02 , இந்து முன்னணி முதல் மாநில தலைவர் தாணுலிங்க நாடாரின் நினைவு தினம் இன்று!