எட்டுக்குள்ள உலகம் இருக்கு ராமையா! அஸ்வின் போட்ட எட்டு!

Published:

முன்பெல்லாம் இரு சக்கர வாகனத்துக்கு ஓட்டுநர் உரிமம் வாங்க வேண்டும் என்று எல்.எல்.ஆர் எடுத்துவிட்டு, வண்டியும் கையுமாக போக்குவரத்து அலுவலகங்களில் காத்துக் கிடப்பார்கள் பலர். அவர்களிடம், என்ன எட்டு போட்டியா என்று கேலியாக நண்பர்கள் கேட்பது உண்டு.

லைசன்ஸ் எடுக்க எட்டு பாஸ் செய்ய வேண்டும். இப்போது நம்ம கிரிக்கெட் லோக்கல் தாதா அஸ்வின் எட்டு போட்டு காட்டியிருக்கிறார். புதிதாக ஐபிஎல்.,இல்  மாஸ் காட்டப் போகிறார் அஸ்வின். நம்ம சென்னை சூப்பர் கிங்க்ஸ் இல்லாமல், பஞ்சாப் அணியில்! அதுவும் கேப்டனாக!

அவர் எட்டு போடுவது பஞ்சாப் அணியின் கேப்டனாக லைசன்ஸ் வாங்கியிருப்பதற்கா என்று பார்த்தால்.. அதில்லை! அவரை டிவிட்டரில் தொடர்பவர்களின் எண்ணிக்கை இப்போது 8 மில்லியனைத் தாண்டி விட்டது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, டப்மேஷில் ரஜினியின் பாட்சா பாட்டை இமிடேட் செய்து, எட்டு போட்டுக் காட்டியிருக்கிறார்.

அவர் எட்டு போட்டது இப்படித்தான்….

 

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்: முன்னேற்பாடுகள் தீவிரம்!

Related articles

Recent articles

spot_img