கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துவரும் அடுத்த படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நேற்று தொடங்கியது.
கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, அனிருத் இசையமைக்கிறார். ஊட்டியில் கதை நிகழும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு, டேராடூன், டார்ஜிலிங் ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது. டேராடூன், டார்ஜிலிங்கைத் தொடர்ந்து மூன்றாம் கட்ட படப்பிடிப்பு சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பின்னி மில்லில் தொடங்கியது.
ரஜினியுடன் இணைந்து நவாஸுதீன் சித்திக், சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ் ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்தில் ஹாஸ்டல் வார்டனாக நடிக்கிறார் ரஜினி. படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர் காளி. இந்தப் படத்தின் பாடல் காட்சிகளுக்காக சென்னைக்கு அருகில் உள்ள ஈவிபி பொழுதுபோக்கு பூங்காவில் செட் அமைக்கப்பட்டு வருகிறது.




