spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 6)

கடையனுக்கும் வழிகாட்டிய குரு: சீரடி சாய்பாபா (பகுதி 6)

- Advertisement -

இதிகாசங்களில் உள்ள நிகழ்வுகளை படிக்கும்போது நாம் அதை கதைகள் என்று கூறி பிறருக்கோ குழந்தைகளுக்கு சொல்கிறோம் .இது தவறாகும் எப்படி எனில் இதிகாசம் என்ற சொல்லின் பொருள் இவ்வாறு நடந்தது என்பதாகும். அதாவது வரலாறு ஆகும். நாம் மேற்கத்திய நாகரிகத்தில் மூழ்கி அவர்கள் எழுதியவற் றை மட்டுமே வரலாறு என்று சொல்லி நமது இதிகாசங்களை கற்பனையாக பார்க்கிறோம்.

பாரத தேசத்தில் தோன்றிய மகான்களும் அடியார்களும் பல பல அதிசயங்களை நிகழ்த்தி இருக்கிறார்கள். அவற்றை நாம் நிகழ்வுகளாகவே இனி கூறி மகிழவேண்டும். பாரதத்தின் தவப்புதல் வர்களின் பெருமையை நிலை நிறுத்த வேண்டும். நமது மதத்தில் விளக்கிற்கு மிக மிக முக்கிய இடம் உண்டு.

அனைத்து வழிபாட்டிற்கும் ஆதாரமாக இருக்கும் விளக்கின் பெருமையை சொல்லிலோ கற்பனையிலோ வடித்துவிட முடியாது. புராண காலத்தில் ஓர் எலி விளக்கில் இருந்த எண்ணெயை குடிக்க முயன்று சூட்டினால் தெரியாமலே தூண்டியது இதனால் விளக்கு பிரகாசமாக எரிந்தது. இதனால் மகிழ்ந்த சிவபெருமான் அந்த எலியை அரசனாக பிறக்க வைத்தார்.

பாபாவும் தன் வாழ்நாளில் விளக்கின் மூலம் அற்புதத்தை நிகழ்த்தி மக்கள் சிலருக்கு உண்மை ஞானத்தை அளித்தார். சாய்பாபா சீரடிக்கு வந்த புதிதில் வேப்ப மரத்தடியிலேயே தங்கியிருந்தார் ஒருநாள் சீரடியில் பலத்த மழை பெய்தது. அதனால் பாபாவின் அடியவர்கள் பலரும் சேர்ந்து அருகில் இருக்கும் பழைய மசூதி யுள் தங்க வற்புறுத்தினர். மக்களின் அன்பிற்குக் கட்டுப்பட்டு பாபா மசூதியில் தங்கினார்.

ஹிந்து மக்கள் எப்படி தினந்தோறும் காலையிலும் மாலையிலும் விளக்கேற்றுகிறார்க லோ அதுபோல் தினந்தோறும் மாலையில் மசூதியின் பல இடங்களில் விளக்கேற்றினார். காலையிலும் மாலையிலும் கார்த்திகை மார்கழி மாதங்களில் மக்கள் சமூக அக்கறையோடு விளக்கேற்றி வைப்பது போன்று இருந்தது. மாலையில் ஏற்பட்ட விளக்கு பகலில் வெளிச்சம் வரும்வரை எரிந்தது.

இதனால் மசூதியை கடந்து செல்லும் மக்களுக்கு மாலையிலும் அதிகாலையிலும் வழிகாட்டி போல் இருந்தது. இதனால் மக்கள் பலரும் பாபாவின் செயலை பாராட்டினார்கள். பாபா விளக்கேற்றுவதற்கு தேவையான எண்ணெய்யைக் கிராமத்தில் இருந்த எண்ணெய் வியாபாரிகளிடம் பெற்று தினந்தோறும் ஏற்றி வந்தார்.

தினந்தோறும் மாலை வேளையில் ஒரு தகர குவலையுடன் சென்று கடை முன் நிற்பார் அவர்கள் என்னை தருவர்கள் .வேண்டிய அளவு பெற்றவுடன் பாபா திரும்பி வந்து சிறிய அகல் ஏற்றி வைப்பார். காலை வரை எரிந்து கொண்டிருக்கும் இச் செய்கைகள் தொடர்ந்து கொண்டிருந்த வேளையில் எண்ணெய் கொடுத்துவந்த வியாபாரிகள் திடீரென என்னை தரக்கூடாது என முடிவெடுத்தனர். அதை செயல்படுத் தினர். அவர்களுக்கு இறைவனின் லீலைகள் தெரிந்திருக்கவில்லை.

எப்படி விளக்கினை ஏற்றிவருக்கு அரசபதவி கொடுத்தாரோ அதே போன்று பல அற்புதங்கள் நிகழ்ந்த தை அறிந்திருக்கவில்லை. சமணர்கள் அதிக அதிகாரம் கொண்டிருந்த காலத்தில் நமிநந்தியடிகள் நாயனார் என்னும் சிவனடியார் தன் வீட்டில் தினந்தோறும் ஜோதி வடிவாய் விளங்கும் சிவபெருமானை வழிபட்டு வந்தார்.

ஒருநாள் விளக்கேற்ற எண்ணெய் இல்லாது போகவே தேடி தவித்தார் .முடிவில் பக்கத்து வீட் டில் இருந்த சமண ரிடம் கேட்டார். அதற்கு அந்த சமணர் மிகவும் கேலியாக பேசி உங்கள் சிவன்தான் கையில் அக்னி வைத்துள்ளாரே! என்றார்.

இதனால் வருந்திய நமினந்தி அடிகள் திருவாரூர் தியாகேசர் இடம் மனமுருகி வேண்டினார். அப்போது சிவபெருமான் அசரீரியாய் கமலாலயக் குளத்தின் நீரை எடுத்து விளக்கேற் என்றார் அதன்படி ஊரார் வியக்க நமிநந்தி நாயனார் விளக்கேற்றி வழிபட்டார்.

இங்கும் பரமசிவன் லீலைதான் என்பது முற்றிலும் உணராத எண்ணெய் வியாபாரிகள் உணரும் வேளையும் வந்தது.

பாபா வழக்கம்போல் தகரக் குவளையை எடுத்துக் கொண்டு கடைவீதிக்கு சென்றார் ஒவ்வொரு கடைகளிலும் என்னை தருமாறு கேட்டு நின்றார் ஆனால் ஒவ்வொரு வியாபாரியும் ஒவ்வொரு காரணம் கூறி எண்ணை இல்லை என்று கூறினார்கள்

ஒவ்வொரு தடையையும் கடந்து கடைசியில் திரும்பிவிட்டார். பாபா நற்பெயர் பெற நான் எண்ணை தருவதா என சிந்தித்த வியாபாரிகள் இனி என்ன செய்வார் பாபா என்பதை அறிய பாபா அறியாத வண்ணம் பின்தொடர்ந்தார்கள்

அவர்கள் அங்கே கண்ட காட்சி அவர்களின் அகங்காரத்தை விரட்டுவது போல் இருந்தது பாபாவின் செயல்!

வழக்கம்போல் மசூதிக்குள் நுழைந்து தன் கை கால்களை சுத்தம் செய்து கொண்டார் பின் தகரக் குவளையில் நீரை எடுத்து குடித்தார் மீண்டும் நீரை எடுத்து ஊற்றினா ர். வழக்கம்போல் ஜோதியை ஏற்றினார் விளக்குகள் அனைத்தும் மிகப் பிரகாசமாக எரிந்தன எண்ணெய் இருந்ததைவிட பிரகாசமாக எரிந்தது

வியாபாரிகள் விக்கித்துப்போய் பாபாவின் காலில் விழுந்தார்கள். அறியாமல் செய்த தவறை மன்னித்து அருள்புரியுமாறு வேண்டினார். அவர்கள் அனைவரையும் எழுப்பி ஆசிர்வதித்த பாபா எப்போதும் உண்மையோடு இருங்கள் உயர்வு நிச்சயம் என்றார்.

பாபாவின் படுக்கை பாபாவிடம் பல விசித்திரமான குணங்கள் இருந்தன அவை நமக்கு அதிசயமாகவும் ஆச்சரியமாகவும். இருக்கும் ஆனால் இவையெல்லாம் மிகச் சாதாரணமானவை.பாபா தங்கியிருந்த மசூதி மிகப் பாழ் அடைந்திருந்தது. எப்போது இடிந்து விழுமோ என்று பயந்த வண்ணம் இருந்தனர்.

ஆனால் இம் மசூதிதான் சீரடியில் பல புயல் வீசியபோது பலத்த மழை பெய்தபோதும் மக்களுக்கு அரணாக இருந்து காத்தது. மசூதியை விட ஆச்சரியம் தருவதாக இருந்தது பாபாவின் படுக்கை நானே சாங் என்னும் பக்தர் பாபா ப டுப்ப்பதற்காக நான்கு அடி நீளமும் 1அடி அகலமும் கொண்ட பலகை ஒன்று தந்தார்.

அதை அன்புடன் பெற்றுக் கொண்ட பாபா அதன் நான்கு மூலைகளிலும் துளையிட்டு மசூதியில் இருந்த கிழிந்த துணிகளை அதில் கட் டி 4 அடி உயரத்தில் தொங்க விட்டார். அந்த உயரத்தில் சாதாரணமாக யாராலும் ஏறி அமர முடியாது. ஆனால் பாபா பலரும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருக்கும்போதே யாரும் அறியா வண்ணம் அமர்ந்து விடுவார்

அந்த வித்தையைக் கண்டு பிடிக்க முயன்று தோற்றுப் போனார்கள் பலர். அதுமட்டுமின்றி அதன் நான்கு பக்கங்களிலும் இரவு முழுவதும் எரியும்படி விளக்கேற்றி வைத்து விட்டு உறங்குவார் சிலநேரம் ஊஞ்சல் ஆடுவார் பாபாவின் செயலை காண நாளுக்கு நாள் கூட்டம் அதிகம் சேர்ந்ததால் பல கையை உடைத்து விட்டு படுத்து உறங்கத் தொடங்கினார்.

சாய்பாபாவிற்கு ஜோதி வழிபாட்டில் அதிக ஆர்வம் இருந்தது அதன் மூலம் பக்தர்கள் மன இருளை மட்டுமல்ல அக இருளையும் விலகி வாழ வேண்டும் என்று நினைத்தார் பாபா என்பதை உணர்வோம் உயர்வு பெறுவோம்.

  • எழுத்து: குச்சனூர் தி.கோவிந்தராஜன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe