365 நாளும் மகளிர் தினம் தான்! இதற்கும் ஒதுக்கீடு தேவையா?!

உரத்த சிந்தனை லைஃப் ஸ்டைல்

womensday - 2026

இன்று காலை கண் விழிப்புகதற்குள், என்னுடைய மொபைல் போனின் வாட்ஸ் ஆப்  வந்திருக்கும் செய்திகயை அறிவிக்க ஆரம்பித்தது.

சிறிது நேரத்தில் திணறும் அளவு செய்தி குவிப்பு. இன்று பெண்கள் தினமாம். விதவிதமான வாழ்த்துக்கள்.

அது சரி.. இன்று பெண்கள் கொண்டாடப் பட வேண்டியவர்கள் என்றால்,. மற்ற நாட்களில்?…

கேள்வி என் மனத்தில் எழுந்தது. நம்முடைய பண்பாடு என்ன சொல்கிறது என்றால், “யத்ர நார்யாஸு பூஜ்யந்தே தத்ர ரமந்தே தேவதாஹா” – அதாவது எங்கே பெண்கள் பூஜிக்கப் படுகிறார்களோ அங்கே தேவர்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள்.

அதாவது 365 நாட்களுமே பெண்கள் தினம்தான். இது பெண்களுக்கு மட்டும் அல்ல, அம்மா அப்பாவிற்கும் பொருந்தும்.

பெற்றோர்கள் எல்லாக் காலத்திலும் வணங்கப்பட வேண்டியவர்கள். மேற்கத்திய நாடுகளில் நம்முடையதுபோல் கட்டுக்கோப்பான குடும்ப அமைப்பு கிடையாது. அதனால்தான் ஒரே ஒரு நாள் அம்மாவிற்கு, அப்பாவிற்கு என்று ஒதுக்கி மாதர்ஸ் டே, ஃபாதர்ஸ் டே என்று கொண்டாடுகிறார்கள்.

இதைப் போய் நாம் ஏன் பின்பற்ற வேண்டும்? மேலும் அவர்களுக்கு மொத்தமே இரண்டே கொண்டாட்டங்கள் தான். கிருஸ்துமஸ் மற்றும்  ந்யூ இயர். அதனால் அவர்கள் எதாவது காரணம் சொல்லி கொண்டாட முற்பட்டிருக்கிறார்கள்.

நமக்கோ வருடம் முழுவதும் விதவிதமான பண்டிகைகள்.  ஆகவே நமக்கு இந்த ‘டேஸ்’ எல்லாம் தேவையற்றது.

இப்படிப்பட்ட சிந்தனைகளின் தொடர்ச்சியில் நான் யாருக்கும் இப்படிப்பட்ட தேவையற்ற நம் பண்பாட்டிற்கு அப்பாற்பட்ட வாழ்த்துக்கள் தெரிவிப்பது இல்லை என்ற முடிவெடுத்துள்ளேன்.

ஆனால் பாருங்களேன். எனக்கு வாழ்த்து அனுப்பியவருக்கு நான் பதில் வாழ்த்து அனுப்ப வில்லை என்று முணுமுணுப்பு சத்தம் என் காதில் விழுகிறதே… இதற்கு நான் என்ன செய்ய?

– ஹேமலதா சுகுமாரன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.