இறுதிப் போட்டியில் நியூசிலாந்து!

லைஃப் ஸ்டைல் விளையாட்டு

newzealand - 2026

உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது நியூ சிலாந்து.

உலக கோப்பை தொடரின் அரையிறுதியில் நியூசிலாந்து அணி 18 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இங்கிலாந்தில் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. மான்செஸ்டர், ஓல்டு டிரஃபோர்டு மைதானத்தில் நடைபெற்ற முதல் அரையிறுதியில் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருந்த இந்திய அணி, 4வது இடம் பிடித்த நியூசிலாந்தை சந்தித்தது.

‘டாஸ்’ வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி நேற்று 46.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்த போது மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, இன்று மீண்டும் போட்டி நடந்தது. இதில் 50 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுக்கு 239 ரன் எடுத்தது நியூஸிலாந்து.

india team - 2026

240 என்ற இலக்குடன் வெற்றி என களத்தில் இறங்கிய் இந்திய அணியில் தொடர்ந்து ‘டாப்-ஆர்டர்’ பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழந்து தடுமாறினர். ரோஹித் சர்மா (1), கோஹ்லி (1), லோகேஷ் ராகுல் (1), தினேஷ் கார்த்திக் (6) ரிஷாப் பன்ட் (32), பாண்ட்யா(32) என முக்கிய 6 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், தோனி, ஜடேஜா இணைந்து தலா அரை சதம் அடித்து 200 ரன் எட்ட உதவினர்.

இருப்பினும், இந்திய அணி 49.3 ஓவரில் 221 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் 18 ரன்னில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று, உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இரண்டாவது முறையாக (2015, 2019) முன்னேறியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.