November 30, 2021, 3:00 am
More

  பாரதி-100: கண்ணன் என் காதலன் (3)

  நாயகி ‘திக்குத் தெரியாத காட்டில்’ அதாவது அடர்ந்த, இருண்ட காட்டில் நாயகனைத் தேடுவதாக அமைந்துள்ளது. காட்டில் பயத்தோடு

  subramania bharati 100 1
  subramania bharati 100 1

  பாரதியாரின் கண்ணன் பாட்டு
  – முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

  கண்ணன் என் காதலன் 3
  காட்டிலே தேடுதல்

  பாரதியார் இப்பாடலை ஹிந்துஸ்தானி தோடி இராகத்தில் ஆதி தாளத்தில் பயாநகம், அற்புதம் ஆகிய இரசங்கள் வெளிப்படுமாறு பாடியுள்ளார். இப்பாடலில் நாயகி ‘திக்குத் தெரியாத காட்டில்’ அதாவது அடர்ந்த, இருண்ட காட்டில் நாயகனைத் தேடுவதாக அமைந்துள்ளது. காட்டில் பயத்தோடு அலையும்போதும், வேடன் ஒருவன் நாயகியை அடைய விரும்புவதாகக் கூறும்போதும் ‘பயாநக இரசமும்’. அந்த வேடன் மறைந்து கண்ணன் தோன்றும்போது ‘அற்புத இரசமும்’ வெளிப்படுகிறது. இடையில் பாரதியார் காட்டின் வளத்த்தையும் பாடுகிறார். இனி பாடலைக் காணலாம்

  திக்குத் தெரியாத காட்டில்-உனைத்
  தேடித் தேடி இளைத்தேனே.

  மிக்க நலமுடைய மரங்கள்,-பல
  விந்தைச் சுவையுடைய கனிகள்,-எந்தப்
  பக்கத்தையும் மறைக்கும் வரைகள்,-அங்கு
  பாடி நகர்ந்து வரு நதிகள்,-ஒரு (திக்குத்)

  நெஞ்சிற் கனல்மணக்கும் பூக்கள்,-எங்கும்
  நீளக் கிடக்குமிலைக் கடல்கள்,-மதி
  வஞ்சித் திடுமகழிச் சுனைகள்,-முட்கள்
  மண்டித் துயர்கொடுக்கும் புதர்கள்,-ஒரு (திக்குத்)

  ஆசை பெறவிழிக்கும் மான்கள்-உள்ளம்
  அஞ்சக் குரல் பழகும்,புலிகள்,-நல்ல
  நேசக் கவிதைசொல்லும் பறவை,-அங்கு
  நீண்டே படுத்திருக்கும் பாம்பு,-ஒரு (திக்குத்)

  தன்னிச்சை கொண்டலையும் சிங்கம்-அதன்
  சத்தத் தினிற்கலங்கும் யானை-அதன்
  முன்னின் றோடுமிள மான்கள்-இவை
  முட்டா தயல்பதுங்குந் தவளை-ஒரு (திக்குத்)

  கால்கை சோர்ந்துவிழ லானேன்-இரு
  கண்ணும் துயில்படர லானேன்-ஒரு
  வேல்கைக் கொண்டுகொலை வேடன்-உள்ளம்
  வெட்கங் கொண்டொழிய விழித்தான்-ஒரு (திக்குத்)

  ‘பெண்ணே உனதழகைக் கண்டு -மனம்
  பித்தங் கொள்ளு’ தென்று நகைத்தான்-”அடி
  கண்ணே,எனதிருகண் மணியே-உனைக்
  கட்டித் தழுவமனங் கொண்டேன். (திக்குத்)

  சோர்ந்தே படுத்திருக்க லாமோ?-நல்ல
  துண்டக் கறிசமைத்துத் தின்போம்-சுவை
  தேர்ந்தே கனிகள்கொண்டு வருவேன்-நல்ல
  தேங்கள் ளுண்டினிது களிப்போம்.” (திக்குத்)

  என்றே கொடியவிழி வேடன்-உயிர்
  இற்றுப் போகவிழித் துரைத்தான்-தனி
  நின்றே இருகரமுங் குவித்து-அந்த
  நீசன் முன்னர்இவை சொல்வேன்; (திக்குத்)

  அண்ணா உனதடியில் வீழ்வேன்-எனை
  அஞ்சக் கொடுமைசொல்ல வேண்டா-பிறன்
  கண்ணாலஞ் செய்துவிட்ட பெண்ணை-உன்தன்
  கண்ணாற் பார்த்திடவுந் தகுமோ?”

  “ஏடீ,சாத்திரங்கள் வேண்டேன்-நின
  தின்பம் வேண்டுமடி,கனியே!-நின்தன்
  மோடி கிறுக்குதடி தலையை,-நல்ல
  மொந்தைப் பழையகள்ளைப் போல”

  காதா லிந்தவுரை கேட்டேன்-‘அட
  கண்ணா’வென் றலறி வீழ்ந்தேன்-மிகப்
  போதாக வில்லையிதற் குள்ளே-என்தன்
  போதந் தெளியநினைக் கண்டேன்.

  கண்ணா!வேடனெங்கு போனான்?-உனைக்
  கண்டே யலறிவிழுந் தானோ?-மணி
  வண்ணா! என தபயக் குரலில்-எனை
  வாழ்விக்க வந்த அருள் வாழி!

  விளக்கம் நாளை…

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,106FansLike
  369FollowersFollow
  46FollowersFollow
  74FollowersFollow
  1,756FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-