
சிந்திக்கும் நேரமிது
- ஜெயஸ்ரீ எம். சாரி, நாக்பூர்
ரம்யமான இயற்கை காட்சியுடனான
அருமையான என் இல்லம்.
இயற்கையின் அழகினை வியக்கின்றேன்.
வண்டு, தேனீயின் ரீங்காரத்திலும்
கூவும் குயிலின் ஓசையிலும்
லயிக்கின்றேன்.
வேலியிலிருந்து ஒரு சலசலப்பு!!
அங்கு சிட்டுக்குருவிகளின் அணிவரிசை!!

ஆவலுடன் சந்திக்கின்றேன்
சிட்டுக்குருவிகளை!!
அவைகளின் முகங்களிலோ அச்சரேகைகள்!!
நெருங்கி சென்று விசாரிக்கின்றேன்.
அவர்களின் வீடுகளெல்லாம்
வெட்டப்பட்டதாம்!
கூடுகளெல்லாம் கலைக்கப்பட்டு விட்டதாம்!
பாதுகாப்பைத் தேடி அலைந்ததாம்!
என் தோட்டத்தில்
அடைக்கலமானதாம்!
வசிக்க என் அனுமதிக்காக
யாசிக்கிறதாம் அவை என்னிடம்!
வெட்கி தலைகுனிகின்றேன் நான்!
அவைகளின் இருப்பிடத்தை
ஆக்கிரமித்த
மானிடனான என்னிடமா அனுமதி?
சிந்திக்கும் நேரமிது. சிட்டுக்குருவிகளை வாழவிட வேண்டிய நேரமிது.



