புளியங்குடி அருகே லாரி மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி டிஎன் புதுக்குடியைச் சேர்ந்தவர் அருணாசலம் மனைவி கல்பனா (40). இவர் இன்று காலை பால விநாயகர்கோயில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது நாமக்கல்லிலிருந்து தென்காசிக்கு சிமென்ட் மூடைகள் ஏற்றிச் சென்ற லாரி கல்பனா மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஐயப்பன் விசாரணை நடத்தி லாரி டிரைவர் நாமக்கல்லைச் சேர்ந்த முத்துசாமி மகன் செல்வராஜ் (36) என்பவரை கைது செய்தார்.