புளியங்குடி அருகே லாரி மோதி பெண் பலி

Published:

 

புளியங்குடி அருகே லாரி மோதியதில் பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
நெல்லை மாவட்டம்  புளியங்குடி டிஎன் புதுக்குடியைச் சேர்ந்தவர் அருணாசலம் மனைவி கல்பனா (40). இவர் இன்று காலை பால விநாயகர்கோயில் அருகே நடந்து வந்து கொண்டிருந்தார்.
அப்போது நாமக்கல்லிலிருந்து தென்காசிக்கு சிமென்ட் மூடைகள் ஏற்றிச் சென்ற லாரி கல்பனா மீது மோதியது. இதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் இறந்தார். இதுகுறித்து புளியங்குடி இன்ஸ்பெக்டர் ஐயப்பன் விசாரணை நடத்தி லாரி டிரைவர் நாமக்கல்லைச் சேர்ந்த முத்துசாமி மகன் செல்வராஜ் (36) என்பவரை கைது செய்தார்.
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img