suman-1
suman-1

தன்னை பெண்தான் என்று கூறி சமூக வலைதளங்கள் மூலம் 70 பெண்களை ஏமாற்றிய இளைஞரை ஐதராபாத் சைபர் க்ரைம் போலீசார் கைது செய்துள்ளனர்.

விஜயவாடாவை சேர்ந்த சுமன் ஐதராபாத்தில் தங்கி அமேசான் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

பகல் முழுவதும் நிறுவனத்திற்காக வேலைசெய்யும் சுமன், இரவு நேரத்தில் பெண்ணாக அவதாரமெடுத்து இன்ஸ்டாகிராம் சமூக வலைதளம் மூலம் பெண்களுக்கு வலை வீசினார்.

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமன் வலைதளத்தில் வீசிய வலையில் 70 பெண்கள் சிக்கிக்கொண்டனர்.
இன்ஸ்டாகிராமில் போலி கணக்குகளை துவக்கி தான் ஒரு பெண் என்று முதலில் சுமன் பதிவு செய்வார்.

சுமனை பெண்ணென்று நம்பி 70 பெண்களும் அவருடன் வலைதளம் மூலம் சகஜமாக பழகி வந்தனர். காலப்போக்கில் தன்னுடைய அரை நிர்வாண மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களை சுமன் வலைதளம் மூலம் அந்தப் பெண்களுக்கு அனுப்பியிருக்கிறார்

இதுபற்றி பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் சுமனை கைது செய்த ஐதராபாத் சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

ALSO READ:  ஊக்கம் தரும் விஜய் திவஸ்; குருபூர்ணிமாவில் கலாம் நினைவுகள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending