
செங்கோட்டையில் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னட்டு இந்தியா முழுவதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக்கோரி அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில் காந்திய ரதயாத்திரை துவங்கியது.
செங்கோட்டை மேலபஜார் வகைமரத்திடலில் அமைந்துள்ள தேசபிதா மகாத்மா காந்தியின் முழு உருவ சிலை முன்பு வைத்து மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில் காந்திய ரதயாத்திரை துவக்க விழா நிகழ்ச்சி நடந்தது.

விழாவில் காந்தியின் வரலாறு குறித்து வி.விவேகானந்தன், இராம்மோகன், டாக்டர் அப்துல்அஜீஸ், திருமாறன், விஜயலட்சுமி, மாரியப்பன் ஆகியோர் பேசினர்.
இதனையடுத்து 6நாட்கள் நடைபெறும் இந்த ரதயாத்திரையில் கலந்து கொள்பவர்களுக்கு செங்கோட்டை இன்ஸ்பெக்டர் சுரேஷ;குமார் சான்றிதழ்கள் வழங்கினார். பின்னர் பூரண மதுவிலக்கு குறித்து உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனர். அதனை தொடர்ந்து வி.விவேகானந்தன் ரதயாத்திரையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மதுரை காந்தி மியூசிய நிர்வாகி டாக்டர் பாதமுத்து, சமூக ஆர்வலர் வெங்கடாம்பட்டி திருமாறன், ஜெயந்திரா பள்ளி தாளாளர் இராம்மோகன், முதல்வர் ராணிராம்மோகன், சுற்றுசூழல் ஆர்வலர் டாக்டர் விஜயலெட்சுமி, முன்னாள் தாசில்தார் முத்துசாமி, அரசு மருத்துவமனை மருத்துவர் டாக்டர் ரத்னபெத்முருகன், ரெங்கநாதன், காங்கிரஸ் கட்சியின் மாவட்ட பொதுச்செயலாளர் எம்எஸ்.முத்துசாமி, நகரத்தலைவர் இராமர், ஐஎன்டியுசி மாவட்டத் துணைத்தலைவர் ஆறுமுகம், மாவட்ட சிறுபான்மை பிரிவு ரெசவுமுகம்மது, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் அப்துல்காதர், முன்னாள் நகர்மன்ற துணைத்தலைவர் ஆதிமூலம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலூகா செயலாளர் மாரியப்பன், துணைச்செயலாளர் பழனிச்சாமி, நகரச்செயலாளர் சுப்பிரமணியன், ஏஐடியுசி மாவட்ட துணைத்தலைவர் சாமி, சமூக ஆர்வலர் மைதீன்பிச்சை, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை ஆசிரியர் சுதாகர், நூலகர்இராமசாமி, நல்லாசிரியர் செண்பகக்குற்றாலம், இசக்கியப்பன், இராமசாமி, இபராஹீம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இன்று துவங்கும் ரதயாத்திரை இலஞ்சி, குற்றாலம், தென்காசி, கடையநல்லூர், புளியங்குடி, வாசுதேவநல்லார், சிவகிரி, சேத்தூர், இராஜபாளையம் சென்று அடைகிறது.
பின்னர் செப் 27ஆம் தேதியில் திருவில்லிபுத்தூர், டி.கல்லுப்பட்டி, திருமங்கலம், விருதுநகர் வழியாக அருப்புக்கோட்டை, சென்றடைகிறது. செப் 28ஆம் தேதியில் சாத்தூர், கோவில்பட்டி, கழுகுமலை, சங்கரன்கோவில், சென்றடைகிறது. செப் 29ஆம் தேதியில் சுரண்டை, ஆலங்குளம், பாவூர்சத்திரம், வெங்கடாம்பட்டி, கடையம், பாபாநாசம், விக்கிரமசிங்கபுரம், வழியாக அம்பாசமுத்திரம் சென்றடைகிறது.
செப் 30ஆம் தேதியில் முக்கூடல், நாங்குநேரி, வள்ளியூர், நாகர்கோவில் வழியாக கன்னியாகுமரி சென்றடைகிறது. அக்டோபர் 1ஆம் தேதியில் வள்ளியூர் வழியாக திருநெல்வேலி சென்று நிறைவடைகிறது. ரதயாத்திரையில் வழிநெடுக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்களையும், பொதுமக்களையும் சந்தித்து பிரச்சாரம் செய்யவிருக்கிறது.
இந்த ரதத்தில் மகாத்மா காந்தி திரு உருவச்சிலை மற்றும் காந்திய பொன் மொழிகள் அடங்கிய தட்டி போர்டுகள் வைத்து மக்களின் பார்வை காந்திய எண்ணங்கள் பதியுமாறு வைக்கப்பட்டுள்ளது.

பின்குறிப்பு—
1 . மகாத்மா காந்தியின் 150வது ஜெயந்தி விழாவை சிறப்பாக கொண்டாடுவது.
2. காந்திய கொள்கைகளான மக்களிடையே பரப்பி நல்லதொரு சமுதாயம் படைப்பது.
3. மாணவ, மாணவியர்களுக்கு காந்திய பண்பாட்டினை போதிப்பது.
4. எதிர் கால தூய அரசியலுக்கு காந்திய முறையை பயில்விப்பது.
5. பூரண மதுவிலக்கு பாரதம் முழுவதும் ஏற்பட காந்திய கொள்கைகளை வலியுறுத்துவது…. உள்ளட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது.



