49 பேர் மீதான தேசத்துரோக வழக்கை வாபஸ் பெறவேண்டும்! விஜயகாந்த்!

Published:

vijyakanth 1 - 2026

இயக்குநர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீதான தேசதுரோக வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக விஜயகாந்த் ட்விட் செய்துள்ளார். தேச துரோக வழக்கு என்பது தேசத்திற்கு எதிராக மாறுபட்ட கருத்தோடு, கருத்துக்களை பதிவு செய்வதும் வன்முறையில் ஈடுபடுவதும் தான் ஒரு குற்றமாக இருக்க முடியும். தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு கடிதம் எழுதுவதே தேசிய குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படுவது சரியானது அல்ல.

manirathnam - 2026

டைரக்டர் மணிரத்னம், நடிகை ரேவதி உட்பட 49 பேர் மீது தேசத்துரோக வழக்குகள் தங்கள் கருத்துகளை பகிர்ந்து கொண்டதற்காக போடப்பட்டு இருந்தால், அதை உடனடியாக திரும்பப்பெற்று, உண்மையான தங்கள் கருத்துக்களை சுதந்திரமாக பகிர்கின்ற ஒரு உரிமையை அனைவருக்கும் தர வேண்டும்.
இவ்வாறு விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

ALSO READ:  தாம்பரம் - தென்காசி இடையே பகல் நேர சிறப்பு ரயில்!

Related articles

Recent articles

spot_img