அதிமுக, திமுக கருத்துக்கு கருத்து கூற விரும்பவில்லை! ரஜினி!

Published:

rajini 1 - 2026

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என அதிமுக, திமுக ஆகிய இருக்கட்சிகளும் கூறியது குறித்து கருத்து கூறவிரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டருகே செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், தமிழகத்தில் இன்னும் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது எனத் தெரிவித்தார்.

இதனிடையே தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி, ரஜினிகாந்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசினார்.

இதேபோல், தமிழக அரசியல் வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே நிரப்பிவிட்டதாக நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலளித்திருந்தார்.

தேமுதிக பொருளாளர் பிரமலதா விஜயகாந்த் தமிழ்நாட்டின் அரசியலில் வெற்றிடம் என்ற பேச்சுக்கே இடமில்லை அதற்கு தமிழக மக்கள் இருக்கிறார்கள் என்றார்.

இந்நிலையில், ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என அதிமுக, திமுக கூறியது குறித்து கருத்து கூற விரும்பவில்லை என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது இதனைத் தெரிவித்தார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

Related articles

Recent articles

spot_img